ஒஹெரு வாழ்கிறாள்
இதிகாசங்களின் தனித்தன்மை உணர்ச்சிகளைக் கையாளும் முறையாகும், குறிப்பாக பிரிவை, மரணத்தை, நிர்கதியை, பெருங்கோபத்தை, அதனால் ஏற்படும் மனக்கொந்தளிப்புகளை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குரலை உயர்த்தாமல் ஆழமாக மனதில் உணர்த்துவதாகும். மகாபாரதமும் ராமாயணமும் இதில் பெரும் சாதனையைப் புரிந்திருக்கின்றன, அதனால் தான் நூற்றாண்டுகளாக அவை மீள்வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கின்றன, அத்தோடு காவியநிகழ்வுகளைக் குறித்து புதிய கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளியாகி வருவதும் இதன்பொருட்டே, மகாகவி பாஷனின் சமஸ்கிருத நாடகமான உறுபங்கம் (Urubhangam )துரியோதனனைப் பற்றிய பொதுப்பிம்பத்தை மாற்றியமைக்க கூடியது. இதிகாசம் காட்டும் …