குழந்தைகளுக்காக நான் தொகுத்து வெளியான கால்முளைத்த கதைகள் நூலை மூன்றாம் வகுப்பு படிக்கும் சைதன்யா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர் நண்பர் வினோத்தின் மகள், வினோத் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர், ஒரு எளிய பயிற்சி போலத் துவங்கி சில மாதங்களில் முழு நூலையும் சைதன்யா மொழியாக்கம் செய்து முடித்துவிட்டார்.
Nothing but water என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா வருகின்ற 9 ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலை புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற உள்ளது,
குழந்தைகளுக்கான ஒரு புத்தகத்தை ஒரு சிறுமியே மொழியாக்கம் செய்துள்ளது சந்தோஷம் தருகிறது, எளிமையான மொழியாக்கமது, அதைச்சிறப்பாக வெளியிட்டுள்ள நண்பர் பவா, மற்றும் ஷைலஜாவிற்கும், வம்சி புக்ஸ் பதிப்பகத்திற்கும் என் மனம் நிறைந்த நன்றி
இந்த நூலினை கவிஞர் நா. முத்துகுமார் வெளியிடுகிறார், நூல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பேசுகிறார்.
வம்சி புக்ஸ் சார்பில் அன்று ஐந்து புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,
இடம் : புக் பாயிண்ட் அரங்கம்
அண்ணா சாலை சென்னை
நேரம் : ஆறுமணி
நாள் : 09.03.2013
****