நகுலன் இல்லாத பொழுது.
நினைவு ஊர்ந்து செல்கிறது பார்க்க பயமாக இருக்கிறது பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை நகுலன் பூனை இல்லை ஆனால் அதன் சிரிப்பு மட்டும் மறையாமல் இருந்து கொண்டேயிருந்தது என்று ஒரு வாக்கியம் ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் வருகிறது. நகுலனின் மரணம் பற்றிய தகவல் அறிந்த போது என் மனதில் தோன்றி மறைந்தது இந்த வரி. பல வருடமாகவே நகுலனை போல சாவை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தவர் வேறு எவருமேயில்லை . வீட்டுப்பூனையை போல சாவு அவரை …