admin

இதாலோ செவோ

 பாதசாரியின் காசி குறுநாவலை வாசித்த போது அதில் இதாலோ செவோ (Italo Svevo ) பற்றி முதல்முதலாக அறிந்து கொண்டேன். பாதசாரி சிறந்த நவீன கவிஞர். அவரது காசி குறுநாவல் குறிப்பிடத்தக்கவொன்று. மீனுக்குள் கடல் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். கோவையில் வசிக்கிறார். அந்த குறுநாவல் வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இன்றும் அது குறித்து தீவிரஇலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் பேசிக் கொண்டுதானிருக்கிறார்கள். பாதசாரி இதாலோ செவோவின் Confessions of Zeno  நாவலை வாசித்திருக்கிறார். அந்த நாவலை …

இதாலோ செவோ Read More »

ஷோலே – அசலா ? நகலா ?

திரைப்பட இயக்குனர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர், ஷோலே மாதிரி ஒரிஜினலான படம் இப்போ எங்க சார் வருது. எப்பேர்பட்ட படம் என்று அடிக்கடி வியந்து கொண்டிருந்தார். எனக்கும் ஷோலே படம் பிடிக்கும். ஆனால் அந்த படம் நிறைய படங்களில் பாதிப்பில் உருவானது என்று சொன்னேன். உடனே அவர் அது எப்படி சார். இப்போ தானே பாரீன் பிலிம்ஸ் பார்த்துட்டு அந்த பாதிப்பில் படம் பண்ணுகிறார்கள். ஷோலே 1975 ல் வெளியான படம் அதில் எப்படி …

ஷோலே – அசலா ? நகலா ? Read More »

விர்தியானா

லூயி புனுவலின் விர்தியானாவை (Luis Buñuel – Viridiana ) சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு முறை பார்த்தேன். குறிப்பிட்ட சில இயக்குனர்களின் படங்களை மட்டுமே திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. செவ்வியல் நாவல்களைப் போல ஒவ்வொரு முறையும் அதில் சில அதிசயங்கள் கண்ணில் படுகின்றன. அந்த வரிசையில் புனுவல் மிக முக்கியமானவர். புனுவலின் திரைபடத்தின் மையக்கரு எப்போதுமே சர்சைக்கு உரியது. பல நேரங்களில் அவரது படங்கள் எழுப்பிய எதிர்வினை அரசியல் சமூக தளங்களில் வலிமையாக …

விர்தியானா Read More »

செர்ஜியோ லியோனி.

        அகிரா குரசோவாவிற்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குனரைச் சொல்ல முடியுமா என்று அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது அவர் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் சொன்ன பதில், செர்ஜியோ லியோனி. (Sergio Leone) ஆனால் குரசோவா அறியப்பட்ட அளவு செர்ஜியோ லியோனியின் பெயர் கொண்டாடப்படவில்லை. அவரது படங்களை அறிந்தவர்கள் கூட அதை இயக்கியவர் செர்ஜியோ லியோனி என்று அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அவை கலைப்படங்கள் அல்ல. மாறாக …

செர்ஜியோ லியோனி. Read More »

சிறந்த இந்தியப்படம் பரிசு

          நான் கதை வசனம் எழுதிய முரளி மனோகர் இயக்கிய கர்ணமோட்சம் திரைப்படம் நவம்பர் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில்  புதுடெல்லியில் நடைபெற்ற   International Students’ Film Festival,.First Frame 2008     என்ற பன்னாட்டு திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 25000 பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குறும்பட போட்டிகளில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு பத்திற்கு மேலான விருதுகளை பெற்றுள்ளது கர்ணமோட்சம். …

சிறந்த இந்தியப்படம் பரிசு Read More »

பள்ளித்தமிழ்.

சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பொதுவில் ஆசிரியர்கள் யாரையும் தேடிப்போய் பார்ப்பார்கள் என்பது வியப்பானதே. அவர்களை நாம் தான் தேடிப்போய் பாரக்க வேண்டும். இவர் ஆரம்ப பள்ளியில் வேலை செய்கிறார். அவர் என்னைச் சந்திக்க வந்த நோக்கம் எப்படி மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று எழுத்தாளர்களாகிய நாங்கள் நினைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாள் முழுவதும் அவரோடு செலவிட்டேன். அன்றைய உரையாடல் முழுவதும் ஆரம்பப் பள்ளியில் …

பள்ளித்தமிழ். Read More »

எழுதத் தெரிந்த புலி

குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. நான் விரும்பி படிக்கும் போர்ஹே குறுங்கதைகள் எழுதுவதில் கில்லாடி. காப்கா, ஹென்ரிச் ப்யூல், யாசுனரி கவாபதா, மார்க்வெஸ், கால்வினோ என்று பலரும் சிறந்த குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுதிய சில குறுங்கதைகளை ஒன்றாக தொகுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இக்கதை அதில் ஒன்று ** எழுதத் தெரிந்த புலி காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கபட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி  …

எழுதத் தெரிந்த புலி Read More »

துயிலும் பெண்

எனது முந்தைய பதிவில் எனக்கு பிடித்த கதை என்று The Sleeping Woman : Zakaria Tamer  இணைப்பை தந்து இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்தால் சந்தோஷம் கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நண்பர் அனுஜன்யா அதை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும். *** துயிலும் பெண் – ஜகரியா தமேர்  தன் தந்தை, தாய் மற்றும் மூன்று இளைய சகோதரர்கள் முன் தலை தாழ்த்தி சுவாத் அழுதாள். தான் அவமானத்தால் களங்கப்பட்டதை துடைத்திட …

துயிலும் பெண் Read More »

இந்த வாரம் படித்தவை

இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நினைவுகுறிப்புகள், விமர்சனங்கள், ஆய்வியல், உலகசினிமா  என்று வெவ்வேறு இணையதளங்களில் வாரம் ஐம்பதுக்கும் குறையாமல் வாசித்து வருகிறேன். சில படைப்புகளை வாசிக்கும்  போது அவசியம் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றும், உடனே அதை தரவிறக்கம் செய்து வைத்து கொள்வேன். ஆனால் தொடர்ந்த எழுத்து வேலைகள், பயணங்களில் அந்த ஆசை அப்படியே கரைந்து போய்விடும். அதற்குள் இன்னொன்றை வாசித்திருப்பேன். இப்படியாக தொடரும் ஏமாற்றத்திலிருந்து விடுபட நான்  வாசித்தவற்றில் இருந்து …

இந்த வாரம் படித்தவை Read More »

புத்தகம் செல்லும் திசை

சில நாட்களுக்கு முன்பாக பழைய புத்தகக் கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். சென்னை நகரில் உள்ள பெரும்பான்மையான பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். எங்கிருந்து அவர்கள் பழைய புத்தகங்களை வாங்கி வந்தாலும் எனக்கு போன் செய்து சொல்வார்கள். ஆனால் சில மாதங்களாக பழைய புத்தகக் கடை பக்கமே போகவில்லை. திடீரென மாலையில் அந்த யோசனை தோன்றியதும்  புத்தககடைக்காரனை தேடிச் சென்றேன். குப்பை போல குவித்து போடப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு வயதானவர் தமிழ்வாணன் புத்தகமிருக்கிறதா என்று தேடிக் …

புத்தகம் செல்லும் திசை Read More »