கடைசிப் பெண்
ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில் அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். …