பாட்டிகளின் கடவுள்
பனிரெண்டு வயதில் திருவிளையாடல் படம் பார்க்கும்வரை கடவுள் பற்றிய பயம் எனக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு நாளும் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஒழுங்கை கொண்டிருந்த வைதீகமான குடும்பம் என் தாத்தாவின் வீடு. கடவுள் எப்போதுமே எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது. ஆகவே பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கபடுத்தபட்டிருந்தோம். கோவிலுக்கு போவதும் விரதமிருப்பமிருப்பதும் வீட்டின் மாற்றமுடியாத பழக்கங்கள். நெற்றியில் திருநீறு பூசாமல் …