admin

குறும்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான குறும்படங்கள் இவை. குறும்படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம். ஐந்து நிமிசங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் படங்கள் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்குகின்றன. எவ்வளவு காட்சிகள் இடம் பெற வேண்டும். எப்படி காட்சிகளை படமாக்க வேண்டும். எப்படி படத்தொகுப்பு செய்ய  வேண்டும் என்று இந்தப் படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். குறும்படம் இயக்க நினைப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து அதற்கான திரைக்கதையை ஒளிப்பதிவை …

குறும்படங்கள் Read More »

சினிமா முத்தம்.

        சட்டம் என் கையில் என்ற படம் 1978 ம் ஆண்டு வெளியானது. கமலஹாசன் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படம். டி.என் பாலு இயக்கியிருந்தார். அப்போது நான்  பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  சிறிய கிராமம் ஒன்றில் வசித்து கொண்டிருந்தோம். சினிமா பார்ப்பதற்கு அருகாமை நகரங்களுக்கு போய்வர வேண்டும். இதற்காகவே விடுமுறை நாட்களில் கோவில்பட்டிக்கு சென்றுவிடுவேன். அங்கே பாட்டியின் வீடு இருந்தது. இஷ்டமான நேரத்தில் சினிமாவுக்கு போய்வரலாம். சினிமாவிற்கும் இடைவேளையில் முறுக்கு வாங்கி …

சினிமா முத்தம். Read More »

ஷாஜியின் வலைப்பக்கம்.

என் நண்பரும் இசைவிமர்சகருமான ஷாஜி ஆங்கிலத்தில் தனது புதிய வலைப்பக்கத்தை துவக்கியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உயிர்மை இதழில் அவர் எழுதி வருகின்ற மேற்கத்திய இசை மற்றும் இந்திய திரையிசை சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் பரந்த வாசகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஷாஜி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர். இவரது கட்டுரைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்துவருகிறார். பல்வேறு புகழ்பெற்ற இசை நிறுவனங்களில் ஆலோசகராக , நிர்வாகியாக பணியாற்றியவர். தமிழ் திரையிசை குறித்து விரிவான அறிதலும் தனித்துவமான பார்வைகளும் கொண்டவர் ஷாஜி.  …

ஷாஜியின் வலைப்பக்கம். Read More »

ஆந்த்ரே வாஜ்தா

        The best remedy for political and social problems is to show them and to speak truly about them – Andrzej Wajda ஆந்த்ரே வாஜ்தா ( Andrzej Wajda ) போலந்தின் புகழ் பெற்ற இயக்குனர். சினிமாவை வலிமையானதொரு அரசியல் வடிவமாக மாற்றியவர். இவரது திரைப்படங்கள் போலந்தின் கடந்த கால நினைவுகளுக்குச் சாட்சியாக உள்ளன.  வாஜ்தாவின் படங்களின் வழியே தனது சொந்த அடையாளங்களை இழந்து …

ஆந்த்ரே வாஜ்தா Read More »

நினைவில் வந்த கவிதை.

ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவர் சி.சிவசேகரம். அவரது நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள்,போரின் முகங்கள்,  மிக முக்கியமான கவிதை தொகுப்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த சிவசேகரத்தின் கவிதை இது. இன்றுள்ள சூழலில்  வாசிக்கையில் மனது மிகுந்த துயரமும் குற்றவுணர்ச்சியும் கொள்கிறது. ** என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர் இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன் இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன் போர்ப் பறைகளை எனச் …

நினைவில் வந்த கவிதை. Read More »

நாகார்ஜுனனின் வலைப்பக்கம்.

வலைப்பதிவுகளில் நான் அன்றாடம் வாசிக்கும் பதிவாக மாறியிருக்கிறது நாகார்ஜுனனின் திணை இசை சமிக்ஞை என்ற வலைப்பக்கம். நாகார்ஜுனன் எனது நல்ல நண்பர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய உலகில் கவனத்திற்குரிய விமர்சகர். கோட்பாட்டாளர். பத்திரிக்கையாளர். புனைகதையாசிரியர், பின்நவீனத்துவ சிந்தனையாளர் என்று அவரது ஆளுமை பன்முகப்பட்டது. தற்போது லண்டனில் வசிக்கிறார். அவர் சென்னையில் வசித்த நாட்களில் ஆறேழு வருடம் தினமும் சந்தித்து பேசியிருக்கிறேன். நாகார்ஜுனன் வீட்டு மாடியில் அவரோடு தங்கிக் கொண்டு பல இரவுகள் நானும் கோணங்கியும்  ஏதேதோ பேசி …

நாகார்ஜுனனின் வலைப்பக்கம். Read More »

போய்வாருங்கள் பொருட்களே.

பார்த்துக் கொண்டிருந்த போதே நம் வாழ்விலிருந்து பல பொருட்கள் நிசப்தமாக வெளியேறி மறைந்து போய்விட்டன. நவீன வாழ்க்கையின் விஞ்ஞான வளர்ச்சியால் பல புதிய பொருட்கள் வாழ்விற்குள் நுழைந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்துவதில் நமக்கு எவ்விதமான சிரமமும் இல்லை. ஒருவகையில் இந்த மாற்றம் தவிர்க்கமுடியாதது. அது தான் வளர்ச்சியும் கூட. ஆனால் யோசிக்கையில் நம்மை விட்டுச் சென்ற பல பொருட்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமுள்ளது.  நோபல் பரிசு பெற்ற கவிஞரான பாப்லோ நெருதா  உடைகள், உண்ணும் பழங்கள் …

போய்வாருங்கள் பொருட்களே. Read More »

காற்றில் யாரோ நடக்கிறார்கள்.

        சமகால தமிழ் நாவல்கள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக  மூன்று வாரங்களுக்கு முன்பு சாத்தூர் சென்றிருந்தேன். நாஞ்சில் நாடன், நான், கோணங்கி, கீரனூர் ஜாகிர்ராஜா ஆகிய நால்வரும் உரையாற்றினோம். நிகழ்ச்சி முடிந்து திசைக்கொருவராகப் பிரிந்த போது இரவே சென்னைக்கு கிளம்புவதற்கு பதிலாக குற்றாலம் வரை சென்று வந்தால் என்னவென்று தோன்றியது.  மருத்துவராக உள்ள என் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வாடகை காரில் பின்னிரவில் புறப்படுவது என்று முடிவு செய்து …

காற்றில் யாரோ நடக்கிறார்கள். Read More »

எண்கள் இல்லாத மொழி

அமேசான் காடுகளுக்குள் வாழும் பிரஹா என்ற ஆதிவாசி இனக்குழுவைப்பற்றிய டேனியல் எவரெட் எழுதிய புத்தகத்தை பற்றி வாசித்து கொண்டிருந்தேன். நவம்பரில் வெளியாக உள்ள புத்தகமது. பிரஹா என்ற ஆதிவாசி பற்றி அறிந்து கொள்வதற்கு தூண்டுதலாக இருந்தது இந்த புத்தக அறிமுகம்.  இன்னும் கானகத்தில் வாழ்ந்து வரும் வேட்டையாடும் ஆதி இனங்களில் ஒன்றான பிரஹா மக்களோடு தங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் மொழி குறித்து எழுதப்பட்ட புத்தகமிது. ஆதிவாசிகளை பற்றிய ஆய்வுகளில் பெரும்பாலும் விசித்திரமான தகவல்கள் செய்திகள் நிரம்பியிருக்கும். …

எண்கள் இல்லாத மொழி Read More »

இரண்டு புகைப்படங்கள்

            மேலே உள்ள இரண்டு புகைப்படங்களை பாருங்கள். இரண்டுமே சாவித்திரி தான். ஒன்று திரையுலகில் நடிகையர் திலகமாக புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி, மற்றது தன்னுடைய மனத்துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் குடி, போதை மருந்து என்று சரணடைந்து உடல்மெலிந்து தன்னை தானே அழித்துக் கொண்ட சாவித்திரியின் இறுதி நாளின் புகைப்படம். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு இடையில் எத்தனையோ நினைவுகள் ஒளிந்திருக்கின்றன. இதை உற்று பார்க்கும் போது காலம் கருணையற்றது …

இரண்டு புகைப்படங்கள் Read More »