admin

சென்னையும் நாவல்களும்

சென்னையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் குறித்து தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள கட்டுரையில் யாமம் நாவல் குறித்து விபின் எழுதியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

பசித்தவர்

புதிய சிறுகதை தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு. நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் …

பசித்தவர் Read More »

கேமிராவின் சிறகுகள்

உலகின் பார்வையில் என்றோ முடிந்து போன நிகழ்வுகள் கூடத் திரையில் காணும் போது நமக்குள் பதைபதைப்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா. அப்படியான அனுபவத்தை Tokyo Olympiad ஆவணப்படம் காணும் போது உணர்ந்தேன். 1964ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கோன் இச்சீகாவா ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய ஆவணப்படங்களில் இதுவே தலைசிறந்தது என்கிறது பிபிசி. அது வெறும் புகழ்ச்சியில்லை. கோன் இச்சிகாவா ஒலிம்பிக் போட்டிகளை வியப்பூட்டும் விதமாகப் படமாக்கியிருக்கிறார். எங்கிருந்து படமாக்கினார்கள். எப்படிப் படமாக்கினார்கள் …

கேமிராவின் சிறகுகள் Read More »

குளிர்மலைக்குச் செல்லும் வழி

மலையை நோக்கிச் செல்லும் பாதைகள் வசீகரமானவை. அவை அறியாத உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. தொலைவிலிருந்து மலைப் பாதையைக் காணும் போது அது மலையின் நாக்கை போலவேயிருக்கிறது. உண்மையில் பாதைகள் காத்திருக்கின்றன. மனிதர்களைப் போலவே பாதைகளுக்கும் வாழ்நாளிருக்கிறது. சில பாதைகள் அற்ப ஆண்டுகளில் மறைந்து விடுகின்றன. பழைய பாதைகள் கதை சொல்லக் கூடியது என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். அது உண்மையே. பாதையை நம்முடைய தலை மறந்துவிடும் கடந்து சென்ற பாதங்கள் மறக்காது என்றொரு சீனப்பழமொழி இருக்கிறது. …

குளிர்மலைக்குச் செல்லும் வழி Read More »

கவிதையின் வெளிச்சம்

இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அண்ணா நூலக அரங்கில் நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் கவிதை நூலை நான் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். இந்த நூல் குறித்து கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார். செறிவான உரை. கவிதையை சமகால நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டிப் பேசியது சிறப்பு. நிகழ்வில் தோழர் எஸ்.ஏ.பெருமாள், கவிதா சொக்கலிங்கம், இரா.தே. முத்து, பாரதி நாகராஜன் கலந்து …

கவிதையின் வெளிச்சம் Read More »

ஜெர்மனியில்

எனது திருடனின் மூன்று அற்புதங்கள் சிறுகதை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹேம் மகேஷ் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை மலையாளம். தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் முன்பே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

காதலின் விதி

இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்ட வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்டு விற்பனை பொருளாக மாறியது. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் தான் வீடு தோறும் காலண்டர் வாங்கி வைத்திருப்பது நடந்தேறியது. குறிப்பாக ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பங்களிப்பு மற்றும் கொண்டைய ராஜுவும் அவரது சீடர்களும் வரைந்த சாமிபடங்கள் பற்றிய ஆய்வின் மூலம் காலண்டர் கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் வெளிப்படுத்தபடுகின்றன. 1954 ஆம் ஆண்டில் …

காதலின் விதி Read More »

உளவாளியின் மனசாட்சி

மாக்சிம் கார்க்கியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு The Fall of a Titan என்ற நாவலை எழுதியிருக்கிறார் ரஷ்ய எழுத்தாளர் இகோர் கூஸெங்கோ. இரண்டாம் உலகப்போரின் போது இவர் கனடாவில் ரஷ்ய உளவாளியாகப் பணியாற்றியவர். இந்த நாவலை 1955ம் ஆண்டுத் தமிழ்சுடர் பதிப்பகம் வீழ்ச்சி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கே.எம்.ரங்கசாமியும். ஜி. கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.. 492 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இப்போது இந்நூலின் பதிப்பு கிடைப்பதில்லை. அமெரிக்க அரசு அணுஆயுதம் தயாரிப்பதை அறிந்த …

உளவாளியின் மனசாட்சி Read More »

குலேப் என்ற மலர்

குலேபகாவலி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். குலேப் என்ற மலரை தேடி பகாவலி நாட்டிற்கு மேற்கொள்ளும் இளவரசனின் சாகசபயணமே படம். அந்த மலரைக் கொண்டு வந்தால் மட்டுமே தந்தையின் பார்வையை மீட்க முடியும். இளவரசன் தாசன் குலேப் மலரைத்தேடி செல்லும் வழியில் சூதாடி இளவரசர்களை அடிமைப்படுத்தும் லக்பேஷா என்ற இளம்பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டு தந்திரமாக அவளை வெல்கிறான் குலேப் என்ற சொல் படம் பார்த்து முடித்த நிமிஷத்திலிருந்து மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. கண்பார்வையை மீட்கும் …

குலேப் என்ற மலர் Read More »