சிங்கிஸ் ஐத்மதேவ்.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ் 2008 ஜூன் மாதம் பத்தாம் தேதி இறந்து விட்டார் என்ற தகவல் மிகத் தாமதமாக நேற்றிரவு தான் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து தெரிந்து கொள்ள நேர்ந்தது. சமீபத்தில் இறந்து போன ரஷ்ய எழுத்தாளர் சோல்சனிட்சென் இறப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் சிறுபத்திரிக்கை கவனம் ஐத்மதேவிற்கு கிடைக்கவில்லை. காரணம் சோல்சனிட்சென் சர்ச்சைக்கு உள்ளானர். அமெரிக்க ஊடகங்களுக்கு நன்றாக அறிமுகமானவர். ஐத்மதேவ் தீவிரமான படைப்பாளி, கோர்பசேவின் வலதுகரம் …