admin

எழுதாத கடிதம்.

கடிதம் எழுதும் பழக்கம் அநேகமாக என்னை விட்டுப் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஈமெயிலும் செல்போனும் வந்தபிறகு கடிதம் எழுதும் தேவை மிகக் குறைவாகிவிட்டது. எவ்வளவு பக்கம் வேண்டுமானலும் கதை எழுத முடிந்த என்னால் ஒரு போஸ்கார்டில் கூட கடிதம் எழுத முடியாது. காரணம் கடிதம் எழுதுவற்கு ஒரு மனநிலை தேவை. அது என்னிடம் இல்லை. அது போல யாருக்கு கடிதம் எழுத நினைக்கும் போதும், என்ன எழுதுவது என்று மனம் கொள்ளும் குழப்பம்  தீராதது. சில வேளைகளில் …

எழுதாத கடிதம். Read More »

ஜெயகாந்தனின் திரைப்படங்கள்.

            சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த நண்பர் மூர்த்தியுடன் நேற்று எழுத்தாளர் ஜெயகாந்தனைக் காண்பதற்காக கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பர்களைச் சந்திப்பதற்காக வீட்டின் மாடியில் தனியாக  ஒரு அறை வைத்திருக்கிறார். கூரை வேய்ந்தது. முன்னதாக சில முறை அங்கே சென்றிருக்கிறேன். உரத்த சிந்தனைகளுடன் உற்சாகமாக பேசக்கூடியவர். இடையில் அவர் புகைப்பதும் குடிப்பதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கும். அவரைத் தினசரி சந்திக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அது ஒரு வித்வசபை. அதை …

ஜெயகாந்தனின் திரைப்படங்கள். Read More »

கப்பல் ஏறிய ஒட்டகச்சிவிங்கி

    சில நாட்களுக்கு முன்பாக  என் பையன் ஒட்டகச்சிவிங்கி எப்படி இந்தியாவிற்கு வந்தது என்று கேட்டான். அப்போது தான் அது ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த விலங்கு என்பதே நினைவுக்கு வந்தது. உடனே ஆப்ரிக்காவில் இருந்து  கப்பலில் வந்தது என்று சொன்னேன். அவன் எப்போது வந்தது, யார் கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தது என்று கேட்டான்.  பதில் தெரியாத இந்தக் கேள்வி என்னை ஒட்டகச்சிவிங்கிகளின் பின்னால் அலையச் செய்தது. ஒட்டகச்சிவிங்கி என்ற சொல்லை எவ்வளவோ முறை …

கப்பல் ஏறிய ஒட்டகச்சிவிங்கி Read More »

இதிகாசங்களை வாசிப்பது எப்படி?

இதிகாசங்களை வாசிப்பது தனியானதொரு அனுபவம். ஒரு நாவல்,சிறுகதை, கவிதைப் புத்தகம் வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக்கூடியது. பொதுவில் இதிகாசங்களை வாசிப்பது எளிதானதில்லை. அதற்கு வாசிக்கும் ஆர்வத்தை தாண்டிய சில அடிப்படைகள் தேவைப்படுகின்றன. அந்த அடிப்படைகளில் பத்து விஷயங்கள் மிக முக்கியமானது 1) இதிகாசத்தை ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும். பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். 2) எந்த தேசத்தின் இதிகாசமாக இருந்தாலும் அதை வாசிப்பதற்கு மூலப்பிரதியைத் தவிர …

இதிகாசங்களை வாசிப்பது எப்படி? Read More »

எப்போதாவது இசைகேட்பவன்.

ரத்தத்தில் மிதந்து வரும் பித்தப்பூவை பறிக்கிறேன் – தேவதச்சன் சில வாரங்களாகவே தொடர்ந்து நாளைக்கு நாலைந்து மணிநேரம் இசை கேட்டுவருகிறேன். பொதுவில் நான் அதிகம் இசை கேட்பவன் இல்லை. என்னுடைய நண்பர்கள் சுரேஷ்கண்ணன், ஷாஜி போன்றவர்கள் இசையில் தேர்ந்த விற்பன்னர்கள். அவர்கள் அளவு நான் கேட்க கூடியவன் இல்லை. எனக்கு இசை தேவைப்படும் தருணங்கள் எப்போதாவது தான் ஏற்படுகின்றது. அதன் முன்பு வரை என் அருகாமையில் உலகின் சிறந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை. …

எப்போதாவது இசைகேட்பவன். Read More »

கதையின் நாவு

ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி . என ஒரு கதையிருக்கிறது. நான் அறிந்தவரை உலகிலேயே மிகச் சிறிய கதைகளில் இதுவே மிகத்தொன்மையானதாக இருக்ககூடும். இந்த ஒற்றைவரி தரும் கதையின் பன்முகதன்மையே இன்று நவீன கதையின் முக்கிய அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது.. இக்கதை கதையைக் கேட்பவன் மனதில் தானே உருவாக்கி கொள்ளவேண்டிய கதையாக உள்ளது. நரி கதைகளின் உலகில் ஆதிகுடி. இந்தியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் கீழைத்தேய நாடுகளின் பயணிகளும் நரியைப் …

கதையின் நாவு Read More »

கின்ஸ்கி

          – கடவுளுக்கு நண்பன் சாத்தானுக்கு தோழன். கிளாஸ் கின்ஸ்கி (Klaus Kinski)  உலகத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் அறிமுகமான  ஜெர்மானிய நடிகர். இன்னும் சிலர் கின்ஸ்கியின் பெயரை அறியாமலே அவரது படங்களை தொடர்ந்து பார்த்திருக்க கூடும். 132 படங்களில் நடித்தவர். நடிப்பில் பல புதிய பரிமாணங்களை உருவாக்கியவர்.உலக சினிமாவில் எனக்கு பிடித்தமான நடிகர்களில் கின்ஸ்கி முக்கியமானவர். இவரது அகூர் தி ராத் ஆப் காட் (Aguirre, the Wrath …

கின்ஸ்கி Read More »

மகாகவி பாரதியின் கடிதங்கள்

கடிதம் -1 –  1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது. (கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)                                                         ஒம்                                                                                                                ஸ்ரீகாசி                                                                                                                ஹனுமந்த கட்டம் எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். …

மகாகவி பாரதியின் கடிதங்கள் Read More »

நம்பிக்கையின் மீதேறி நடந்து

        மலையேற்றதைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணா என்ற சிகரத்தில் மலையேற்றம் செய்த பிரெஞ்சு மலையேற்ற குழுவின் புத்தகத்தை வாசித்தேன். அது போலவே ஹெமிங்வேயின் கிளிமஞ்சரோ பயணம் பற்றிய புத்தகம் சுவாரஸ்யமானது. நான் மேற்குதொடர்ச்சி மலையேறி பலமுறை அலைந்திருக்கிறேன்.  அப்படி சமீபத்தில் நான் வாசித்த சீன் ஸ்வானரின் எவரெஸ்ட் மலையேற்றம் பற்றிய Keep Climbing புத்தகம் என்னை உலுக்கிவிட்டது. சாசகம் என்பது மலையேறுவதில் …

நம்பிக்கையின் மீதேறி நடந்து Read More »

எரியும் பனிக்காடு

சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது. இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள். 1940 ம் ஆண்டுகளில் …

எரியும் பனிக்காடு Read More »