டாலியின் வினோத உலகம்
“I am not strange. I am just not normal.” ― Salvador Dalí ஓவியர் சல்வடோர் டாலியின் வாழ்க்கையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Daliland. மேரி ஹாரன் இயக்கியுள்ளார். பென்கிங்ஸ்லி டாலியாக நடித்திருக்கிறார். மிகப்பொருத்தமான தேர்வு. 1970களில் நடக்கும் கதை. தனது சர்ரியலிச ஓவியங்களால் மிகப்பெரும் புகழை அடைந்தவர் டாலி. கரப்பான்பூச்சி மீசையும் விசித்திரமான ஒப்பனைகளும் கொண்ட டாலி தனது ஒவியங்களைப் போலவே வாழ்க்கையிலும் கனவுலகில் சஞ்சரித்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை ஒழுக்க …









