ஆங்கிலத்தில்
எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/
எனது வானில் எவருமில்லை சிறுகதையை ஆர்.சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இக்கதை Borderless இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு https://borderlessjournal.com/2023/01/20/nobody-in-the-sky/
ஜி.கோபி மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த வாசிப்பனுபவம் •• மண்டியிடுங்கள் தந்தையே நாவல் திறந்த வேகத்தில் வாசித்து முடித்துவிடக் கூடிய எளிய சுவாரசியமான புத்தகம். ஆனாலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வாசித்தேன். ரஷ்யவில் யஸ்யானா போல்யானா பண்ணைக்குச் சென்று டால்ஸ்டோயை பார்த்து உடன் பழகியது போல இருந்தது. அந்தப் பண்ணையின் மீதுள்ள ஒரு மணற் குன்றின் மீது நின்று கொண்டு அங்குள்ள விவசாயிகளோடு தொப்பி அணிந்த படி டால்ஸ்டோய் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எந்த …
சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம் சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )· ** நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன். இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அசுரவாத்தியம் என்று அவர் …
நீதி மறுக்கப்பட்ட ஒருவனின் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது Ghodwa. 2021ல் வெளியான துனிசியப்படம். துனியப்புரட்சிக்குப் பிந்திய அரசியல் சூழலை விவரிக்கும் இப்படத்தை இயக்கியவர் தாஃபர் எல்’அபிதீன். இவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞரான ஹபீப் தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறார். புரட்சிக்கு முந்திய அரசின் மோசமாக வன்கொடுமையால் அவரைப் போலப் பலரும் பாதிக்கப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சி அரசாங்கம் உருவானதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹபீப் நம்பினார். ஆனால் …
புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28. நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள். பேருந்து …
பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது இந்தக் கட்டுரை …
லூயிஸ் பெர்னாண்டோ வெரிசிமோ பிரேசிலின் புகழ்பெற்ற எழுத்தாளர், போர்ஹெஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் BORGES AND THE ETERNAL ORANG-UTANS என்ற நாவலை எழுதியிருக்கிறார் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆங்கில நாவல்கள் விற்கும் பழைய புத்தகக்கடை குவியல் ஒன்றினுள் இந்த நாவலைக் கண்டெடுத்தேன். எட்கர் ஆலன் போ பற்றிய கருத்தரங்கிற்காகப் பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வருகை தரும் வோகெல்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு துப்பறியும் கதையை எழுதியிருக்கிறார். வியப்பூட்டும் இந்த நாவலில் போர்ஹெஸ் துப்பறியும் …
மொழிபெயர்ப்பாளர் பாலாஜி தமிழிலிருந்து சிறந்த கதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த தொகுப்பில் எனது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது
(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார் அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார். போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …
இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html