நாகரீகத்தின் கதை
பிபிசி தயாரிப்பில் 1969ல் வெளியான கலைவரலாற்று தொடரான Civilisation 13 பகுதிகளைக் கொண்டது. இதற்கு இணையாக இன்று வரை ஒரு கலைவரலாற்றுத் தொடர் வெளியாகவில்லை. இந்தத் தொடர் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகச்சிறந்த ஒலி ஒளியில் காணக்கிடைக்கிறது. கலைவிமர்சகர் கென்னத் கிளார்க் இத் தொடரைத் தயாரித்து வழங்கினார். அவர் ஒரு நிகரற்ற கலையாளுமை. ஓவியம், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை குறித்த அவரது பார்வையும் ஆழ்ந்த அவதானிப்புகளும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்தத் தொடருக்காகக் கென்னத் கிளார்க் எழுதிய உரை சிறு …





