குற்றமுகங்கள்

குற்றமுகங்கள் 25 சோனாபானி

இரண்டு ஆண்டுகள் நாற்பத்தி மூன்று நாட்கள் தேடி அலைந்த பிறகு சோனாபானியை துல்ஜாபூரில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். சோனாபானி ஒரு நாய். அதுவும் திருடர்களின் தூதுவனைப் போலச் செயல்பட்ட நாய். கைபா என்ற குற்றக்கும்பல் அதனைப் பழக்கியிருந்தார்கள். சோனாபானியின் கழுத்தில் ஒரு தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு இலையைக் கட்டி அனுப்பி வைப்பார்கள். என்ன இலை. எத்தனை இலைகள் என்பதைப் பொறுத்து தகவல் மாறக்கூடியது. ஒளிந்து வாழ்ந்து வந்த கைபா கும்பல் தங்கள் வீட்டிற்குத் தகவல் தருவதற்கும், …

குற்றமுகங்கள் 25 சோனாபானி Read More »

குற்றமுகங்கள் 24 ஜம்னா

ஜம்னா என்பது ஒருவரின் பெயரில்லை. அது ஒரு குழுவின் அடையாளம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் விதிஷாவின் தெற்கே பரவியிருந்தார்கள். அவர்கள் துறவிகளுக்கு எதிரானவர்கள். துறவிகளைத் தொந்தரவு செய்யக்கூடியவர்கள். யாத்திரைக்காகச் செல்லும் துறவிகள் இரவு நேரம் சாவடியில் தங்கும் போது அவர்களின் தண்டம், கப்பரை மற்றும் நீர்குவளைகளைத் திருடிவிடுவார்கள். திருட்டுக் கொடுத்த பொருளுக்காகத் துறவிகள் கவலைப்படக்கூடாது. புகார் அளிக்கக் கூடாது என்பது பொதுவிதி. ஆனால் தன்னுடைய பொருளை பறிகொடுத்த துறவி மிகுந்த கோபம் கொள்வான். திருடனைச் சபிக்கவும் …

குற்றமுகங்கள் 24 ஜம்னா Read More »

குற்றமுகங்கள் 23 தாம்பே

குற்றத்தின் காரணவியல் என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆர்.ஜே. பிராங் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதில் இரண்டு ஆண்டுகள் தென்னிந்தியாவில் களஆய்வு செய்ததாக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இவரது ஆய்வின் நோக்கம் எந்தப் பருவ காலத்தில் எது போன்ற குற்றங்கள் அதிகமாகின்றன என்பதைக் கண்டறிவதாகும். அவர் தனது கள ஆய்வில் விசித்திரமான பல உண்மைகளைக் கண்டறிந்தார். இந்தியாவில் அதிகபட்ச கொலைகள் வெப்பமான மாதங்களில் நடைபெறுகின்றன ஆகஸ்ட் மாதத்தில், கிராமப்புற தீ விபத்துகள் அதிகமாகின்றன. அக்டோபர் முதல் …

குற்றமுகங்கள் 23 தாம்பே Read More »

குற்றமுகங்கள் 22 தகையார்

சிறாக்குடியில் வசித்த தகையாருக்கு எழுபது வயதிருக்கும். ஆறரை அடி உயரம். நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். உறுதியான உடற்கட்டு. நரைத்த தலைமயிர். நெய் தடவி வளர்த்த அடர்த்தியான மீசை. தாடி. இடது காதில் இரண்டு மயிர் நீண்டிருந்தது. எருமைத்தோல் செருப்பு அணிந்திருப்பார். இடுப்பில் ஒரு குறுவாள் சொருகப்பட்டிருக்கும். தகையார் தானாக எதையும் திருட மாட்டார். யாராவது திருடித் தரும்படி வேண்டுகோள் வைத்தால் மட்டுமே திருடுவார். அதுவும் அந்த வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் தான் திருடுவார். அப்படித் திருடிக் …

குற்றமுகங்கள் 22 தகையார் Read More »

குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா

மதராஸில் எடுக்கபட்ட முதல் புகைப்படம் எது, யாரைப் படம் பிடித்தார்கள் எனத் தெரியவில்லை ஆனால் கார்டன் மார்த்தா புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அவளுக்கு வயது நாற்பது. தனது உருவத்தை அச்சு அசலாகத் தன்னுடைய கையில் வைத்து பார்க்க முடியும் என்று அவள் கற்பனை கூடச் செய்ததில்லை. ஆகவே புகைப்படத்தை அவள் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணாடி காட்டாத எதையோ புகைப்படம் உணர்த்திவிடுகிறது. கண்ணாடியை விட்டு நாம் நகர்ந்தவுடன் பிம்பம் மறைந்துவிடும். ஆனால் கையில் உள்ள புகைப்படம் …

குற்றமுகங்கள் 21 கார்டன் மார்த்தா Read More »

குற்றமுகங்கள் 20 ஜுகூர்

1893ல் வட இந்திய கிராமங்களில் மணப்பெண் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணை யாரோ கடத்திப் போய்விடுகிறார்கள். யார் அவன் என்றோ, பெண்ணை எப்படிக் கடத்திக் கொண்டு போகிறான் என்றே கண்டறிய முடியவில்லை. இந்தக் கடத்தலுக்குப் பயந்து மணப்பெண் யார், எங்கே திருமணம் நடக்கிறது என்ற தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வருவதை நிறுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் தவிர வேறு எவரும் திருமணத்திற்கு அழைக்கபடவுமில்லை. இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும் …

குற்றமுகங்கள் 20 ஜுகூர் Read More »

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்

அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள்.  இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். …

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன் Read More »

குற்றமுகங்கள் 18 திருத்தேரி

சந்திரகிரி கொலை வழக்கு என்ற துப்பறியும் நாவல் வெளியான ஆண்டு 1937 ஆக இருக்கலாம். அதை எழுதியவர் சோம.வெங்கடலட்சுமி. எட்டணா விலையில் அந்த நாவல் விற்கபட்டது. யாரோ ஒரு வழக்கறிஞர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் பெயரில் கதை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். பாண்டுரங்கன் அந்த நாவலை விலை கொடுத்து வாங்கவில்லை. அது போல நாவல் ஒன்றை தான் எழுதியிருப்பதாகவும், அதை அச்சிட வேண்டும் என்றும் கோபால்ராவ் அச்சகத்திற்கு வந்த திருத்தேரி கொடுத்த புத்தகத்தைத் …

குற்றமுகங்கள் 18 திருத்தேரி Read More »

குற்றமுகங்கள் -17 கோளாம்பி

1828 நவம்பர் 20 அன்று கொச்சி இராஜ்ஜியத்தின் திவான் உத்தராதி தம்பிரானின் பசு திருடு போயிருந்தது. நெற்றியில் சங்கு அடையாளம் கொண்ட அந்தப் பசுவை அவர் மகாலட்சுமியின் அவதாரமாகவே கருதினார். நேத்ரி என்று பெயரிடப்பட்ட அந்தப் பசுவிற்காகவே சொர்க்க மண்டபத்தினைக் கட்டியிருந்தார். பசுவைக் கயிற்றால் கட்டக்கூடாது என்பதற்காக வெள்ளிச்சங்கிலியை அணிவித்திருந்தார். பசு நின்றிருந்த அந்த மண்டபத்தில் காலையும் மாலையும் சாம்பிராணி போடுவார்கள். மண்டபத் தூண்களுக்கு இடையே சேலையால் தடுப்பு உருவாக்கி மணப்பெண்ணைப் பாதுகாப்பது போல வெளியாள் கண் …

குற்றமுகங்கள் -17 கோளாம்பி Read More »

குற்றமுகங்கள் 16 மண்டே ராணி

மண்டே ராணியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் பந்தயக்குதிரை ஒட்டியள். . அவளது குதிரையின் பெயர் மண்டே. ஆண்கள் மட்டுமே குதிரைப்பந்தய ஜாக்கியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தின் முதல் பெண் ஜாக்கியாக அறியப்பட்டடாள். பிரிட்டனின் குதிரைப்பந்தய விதிகளின் படி பெண்கள் ஜாக்கியாகப் பணியாற்ற இயலாது, இருப்பினும் 1804 ஆம் ஆண்டிலேயே பெண்கள் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு சவாரி செய்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஜான் போவெல் என்ற ஆண் அடையாளத்துடன் ஒரு பெண் ஜாக்கியாகப் பணியாற்றினாள் என்கிறார்கள். ஆனால் அந்த …

குற்றமுகங்கள் 16 மண்டே ராணி Read More »