சினிமா

இருவர் கண்ட ஒரே கனவு

திபெத்தின் கெக்சிலி பீடபூமியின் 16,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையே உலகின் மிக உயரமான சாலையாகும். அந்தக் கெக்சிலி சாலையில் லாரி ஒட்டிக் கொண்டு செல்கிறான் டிரைவர் ஜின்பா. ஆள் நடமாட்டமேயில்லாத நீண்ட சாலை. பழைய ஆடியோ கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டபடியே வண்டி ஒட்டுகிறான் ஜின்பா. கேமிரா அவன் முகத்தையே மையமிடுகிறது. சலிப்போ, கோபமோ எதுவுமில்லை. அவன் கண்கள் அடிக்கடி கயிற்றில் தொங்கும் டாலரில் உள்ள மகளின் புகைப்படத்தை நோக்குகின்றன. அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டுமே …

இருவர் கண்ட ஒரே கனவு Read More »

பண்பாட்டின் வாசல்கள்

ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளரான . உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி எனும் யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றி Ananthamurthy…Not a biography…but a hypothesis என்ற ஆவணப்படத்தைக் கிரிஸ் காசரவள்ளி இயக்கியுள்ளார். கடஷ்ரத்தா என்ற அனந்தமூர்த்தியின் கதையைப் படமாக்கி தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர் காசரவள்ளி. கிரிஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை கடஷ்ரத்தா. அக் கதையின் பாதிப்பைப் பல ஆண்டுகளாக அவரால் மறக்க முடியவில்லை. பூனே திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துத் திரும்பிய …

பண்பாட்டின் வாசல்கள் Read More »

முன்செல்லும் பறவை

இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவரான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் குறித்து The Seer Who Walks Alone என ஆவணப்படம் ஒன்றை இயக்குநர்: ஜி.அரவிந்தன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் ஜேகே உருவான விதம், மற்றும் அவரது சொற்பொழிவுகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. 1985 ஆண்டுத் தயாரிக்கப்பட்ட இப்படம் 50 நிமிஷங்கள் ஓடக்கூடியது. சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேசுவதைக் கேட்கத் திரளும் விதவிதமான ஆட்களையும் தரையில் அமர்ந்து உரையை ஆழ்ந்து கேட்கும் அவர்களின் ஈடுபாட்டினையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. புத்தர் …

முன்செல்லும் பறவை Read More »

சிரிப்பை இழந்தவர்

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஆங்கில எழுத்தாளர் பி.ஜி. வுட்ஹவுஸ் மற்றும் அவரது மனைவி எத்தேல் ஆகியோர் பிரான்சில் வசித்து வந்தார்கள். நகைச்சுவையான கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பி.ஜி. வுட்ஹவுஸ் பெரும்புகழ் பெற்றிருந்தார். அமெரிக்காவில் அவரது கதைகளுக்கு இருந்த புகழின் காரணமாக ஹாலிவுட் மற்றும் அமெரிக்க மேடைநாடகங்களுக்கு எழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இதனால் அவரது வருமானம் கொட்டியது. இங்கிலாந்தின் நார்மண்டியில் வசித்த போது அங்கு ஏற்பட்ட வரிப்பிரச்சனை காரணமாகத் தனது தேசத்தை விட்டு வெளியேறி வுட்ஹவுஸ் பிரான்சில் …

சிரிப்பை இழந்தவர் Read More »

ஃபெலுடா- 50

சத்யஜித்ரேயின் ஃபெலுடா (Feluda) கதைகள் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி சாக்னிக் சாட்டர்ஜி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.  Feluda: 50 years of Ray’s detective என்ற அப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். இயக்குநர் கோவிந்த் நிஹலானி மற்றும் ரேயின் மகன் சந்தீப்பிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சாக்னிக் சாட்டர்ஜி தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் ஆறு மொழிகளில் ஃபெலுடா கதைவரிசை வெளியாகியுள்ளது. வீ.பா.கணேசன் மொழியாக்கத்தில் பாரதி புத்தகாலயம் ஃபெலுடா கதைவரிசையை வெளியிட்டபோது நான் தான் புத்தகங்களை வெளியிட்டேன். …

ஃபெலுடா- 50 Read More »

கறை படிந்த சட்டை

.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை  ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில்  மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது. குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் …

கறை படிந்த சட்டை Read More »

மார்க்ஸின் மகள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்ஸின் இளமைக்காலத்தை முதன்மைப்படுத்தி The Young Karl Marx என்றொரு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்ல் மார்க்ஸின் இளைய மகள் எலினார் வாழ்க்கையை மையப்படுத்தி Miss Marx என்ற இத்தாலியப் படம் வெளியாகியுள்ளது. 2020ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் பெண் இயக்குநர் சுசனா நிச்சியாரெல்லி. படம் எலினார் தனது தந்தை மார்க்ஸின் இறுதிச் சடங்கின் போது அவரது உடலின் முன்பாக நின்றபடியே அவரைப்பற்றியும் தனது தாய் ஜென்னி …

மார்க்ஸின் மகள் Read More »

காற்றில் பறந்த மலர்கள்

ஜப்பானிய இயக்குநர் யசுஜிரா ஓசு இயக்கிய பெரும்பான்மை திரைப்படங்கள் திருமணத்தை மையமாக் கொண்டவை. தகுந்த இடத்தில் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்ய விரும்பும் தந்தை. தனிமையில் வசிக்கும் தந்தைக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் மகள். விதவையான பெண்ணுக்கு நடக்கும் மறுதிருமணம், குழந்தையோடு தனித்து வாழும் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆசை. உறவிற்குள் திருமணம் செய்வதில் ஏற்படும் சிக்கல். காதல் திருமணத்தினை வீடு எப்படிப் புரிந்து கொள்கிறது என்ற சிக்கல். சகோதரிகளுக்குள் திருமணத்தால் ஏற்படும் …

காற்றில் பறந்த மலர்கள் Read More »

மாடத்தி

லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ள மாடத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் சிறந்த படம். கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா தொடர்ந்து மாற்றுசினிமாவை முன்னெடுத்து வருபவர். தனது ஆவணப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லீனா மாடத்தியின் வழியே புதிய திரைச்சாதனையைச் செய்திருக்கிறார். சுயாதீனப்படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த வகையில் மாடத்தி மிக முக்கியமான படம் என்பேன். மாடத்தி கோவிலுக்குச் செல்லும் புதுமணத்தம்பதிகளின் வருகையில் …

மாடத்தி Read More »

மணமகளின் காதல்

Brides என்ற கிரேக்கத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகாலக் கிரேக்க திரைப்படங்கள் ஒளிப்பதிவிலும் இசையிலும் புதிய கதை சொல்லும் முறையிலும் உச்சத்தை அடைந்திருக்கின்றன. பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கிய ஐந்து படங்களை முன்னதாகப் பார்த்திருக்கிறேன். இதில் 2013ல் வெளியான Little England நிகரற்ற படம். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இதுவே. எண்பது வயதான வோல்காரிஸ் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார், சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடலோடிகளின் வாழ்க்கையை மையமாக் கொண்டு கிரேக்கத்தில் நிறையப் …

மணமகளின் காதல் Read More »