சினிமா

நான்கு ஜன்னல்கள்.

இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது. சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர். வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் …

நான்கு ஜன்னல்கள். Read More »

காதலின் அலைகள்

‘Little England’ (‘Mikra Anglia’) பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கி 2013ல் வெளியான கிரேக்கத் திரைப்படம் ஆண்ட்ரோஸ் தீவைச் சேர்ந்த ஓர்சா மற்றும் மோஷா என்ற இரு சகோதரிகளின் காதல் மற்றும் திருமணத்தைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். படமாக்கப்பட்டவிதம் மிகச்சிறப்பு. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிமோஸ் சார்கெட்ஸிஸ் ஒவ்வொரு காட்சியினையும் ஓவியம் போல உருவாக்கியிருக்கிறார். அடர் வண்ணமும் பீறிடும் ஒளியும் மாறுபட்ட கோணங்களும் வசீகரமாகவுள்ளன. நாவலை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதால் படம் இருபது ஆண்டுக் …

காதலின் அலைகள் Read More »

டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் …

டோமிரிஸின் கோபம். Read More »

சிறுமியின் கனவு.

தி ரிக்கார்டர் எக்ஸாம் என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். 27 நிமிஷங்கள் ஓடும் அழகான திரைப்படம். 1988 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான யூன்-ஹீ என்ற  மாணவியின் ஆசையைப் பேசுகிறது. பள்ளியில் படிக்கும்  யூன்-ஹீ ஒரு நாள் ரிக்கார்டர் என்ற குழலிசைக் கருவியை வீட்டில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். தன் அம்மாவிற்குப் போன் செய்து அதைப் பள்ளியில் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்வதில் படம் துவங்குகிறது. பள்ளியில் குழலிசைத் தேர்வு நடைபெறவுள்ளது. அதில் …

சிறுமியின் கனவு. Read More »

பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன். மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை . ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி …

பூமாவின் கண்கள் Read More »

எமிலி டிக்கின்சனின் காதல்

கவிஞர் எமிலி டிக்கின்சன் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் Wild Nights with Emily என்ற படத்தைப் பார்த்தேன். மேடலின் ஓல்னெக் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படமிது A Quiet Passion என்ற ஒரு திரைப்படமும் எமிலியின் சுயசரிதையை மையமாகக் கொண்டதே. இரண்டிலும் அறியப்படாத எமிலியின் ரகசியக் காதலே முதன்மையாகப் பேசப்படுகிறது. தனது இருபதாம் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், எமிலி டிக்கின்சன் முதன் முறையாகச் சூசன் கில்பர்ட்டை சந்தித்தார். சூசன் அவளை விட ஒன்பது நாட்கள் …

எமிலி டிக்கின்சனின் காதல் Read More »

ஹெமிங்வேயின் நண்பர்

எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி கூப்பருக்குமான நட்பை விவரிக்கும் Cooper & Hemingway: The True Gen என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், அவர்களின் இருபது ஆண்டுகால நட்பை ஆராய்கிறது. கேரி கூப்பர் மற்றும் எர்னஸ்ட் ஹெமிங்வே இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள். இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள். ஒரே உயரம். ஹெமிங்வே கூப்பரை விடப் பத்து மாதம் மூத்தவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கூப்பர். …

ஹெமிங்வேயின் நண்பர் Read More »

மோலியரின் காதல்

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். லாரன்ட் டிரார்ட் இயக்கியுள்ளார் 1658 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது பகடி நாடகங்களுக்குப் பிரபலமான மோலியர் அதை விடுத்து துன்பவியல் நாடகம் ஒன்றை நிகழ்த்த விரும்புகிறார். அவரது குழுவினர்கள் அதை விரும்புவதில்லை. மன்னரின் ஆதரவுடன் மோலியர் நாடகங்களை நிகழ்த்துகிறார். மன்னருக்கோ நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஆகவே கட்டாயத்தின் பெயரில் நகைச்சுவை நாடகம் போட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்தச் சூழலில் அவரது …

மோலியரின் காதல் Read More »

இன்னொரு விசாரணை

1961ல் வெளியான Judgment at Nuremberg என்ற திரைப்படம் யூத இனப்படுகொலை குறித்த நீதிமன்ற விசாரணையை முதன்மைப்படுத்தியது. மிகச்சிறந்த படம். ஹிட்லர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த யாரையெல்லாம் தண்டிப்பது என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது. இதில் ஒரு இளம் வழக்கறிஞர் இனப்படுகொலை என்பது ஒரு மாயை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய். புகைப்படங்கள். சாட்சியங்கள் சொல்வது உண்மையில்லை. எங்கேயிருக்கிறது ஹிட்லரின் உத்தரவு. கேஸ் சேம்பர் பற்றிய செய்திகள் யாவும் கட்டுக்கதை என்று வாதிடுவார். இனப்படுகொலையின் சாட்சியங்கள் …

இன்னொரு விசாரணை Read More »

எரிமலையின் முன்னால்.

ஸ்ட்ரோம்போலி 1950ல் வெளியான திரைப்படம். ராபர்டோ ரோசோலினி இயக்கியது. இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் குறிப்பிடத்தக்கது. இங்க்ரிட் பெர்க்மென் நடித்துள்ள இந்தப்படம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கிறது. லிதுவேனிய அகதியான கரீன் இத்தாலிய அகதி முகாம் ஒன்றில் வசிக்கிறாள். முகாம் வாழ்க்கையிலிருந்து தப்பிச்செல்வதற்காக முகாமின் காவலராக உள்ள ராணுவ வீரனான அன்டோனியோவைத் திருமணம் செய்து கொள்கிறாள். அன்டோனியோவின் பின்புலம் எதுவும் அறியாமலே அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவனும் அவளது நிகரற்ற அழகில் மயங்கி …

எரிமலையின் முன்னால். Read More »