நித்தியத்தின் நுழைவாயில்
ஒவியஉலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஒவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போலக், கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஒவியர்களுக்கு எப்போதும் உண்டு. உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஒவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. கௌதம புத்தர் தனது முதற்சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையுறாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை …