அபு எனும் நட்சத்திரம்.
சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி படத்தில் அபு என்ற சிறுவனாக நடித்த சுபீர் பானர்ஜி பின்னாளில் என்னவானார். அவரது சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. ஏன் அவர் திரைத்துறையை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார் என்பதை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்ட வங்க மொழித் திரைப்படம் அபுர் பாஞ்சாலி( Apur Panchali ) இதனை இயக்கியிருப்பவர் கௌசிக் கங்குலி. சர்வதேச திரைப்படவிழாக்களில் முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பதேர் பாஞ்சாலியின் பின்னால் மறைந்துள்ள அறியாக்கதையொன்றை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது சுபீர் பானர்ஜி பதேர் பாஞ்சாலி படத்தில் …