சினிமா

யானையுடன் ஒரு பயணம்.

கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநர் இயக்கிய Pop Aye என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017 வெளியான திரைப்படம். தானா என்ற கட்டிடக்கலைஞர் ஒரு யானையை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் காட்சியுடன் படம் துவங்குகிறது. யானையின் முதுகில் கிழிந்த பை போன்ற ஒன்று தொங்குகிறது. காயம்பட்ட காலுடன் யானை மெதுவாக நடக்கிறது. பாங்காக்கின் பிரதான சாலையில் தானா யானையோடு நடந்து வருகிறார். பெருநகரத்தில் வாழும் ஒரு மனிதன் ஒரு காரை, பைக்கை, ஏன்  ஒரு கப்பல் …

யானையுடன் ஒரு பயணம். Read More »

எழுத்தின் தோழமை.

மார்க்ரெட் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். Margaret Atwood: Once in August என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் மைக்கேல் ரபோ. 1984ல் வெளியானது மைக்கேல் ரபோ எழுதும் கடிதம் ஒன்றின் மூலம் ஆவணப்படம் துவங்குகிறது. கனேடிய எழுத்தாளர்கள் பலரையும் பற்றி ஆவணப்பபடம் எடுத்துவரும் தான் அட்வுட் பற்றிய ஆவணப்படம் ஒன்றை உருவாக்க விரும்புவதாகவும் அது அவரைப் பிரேதப் பரிசோதனை போலக் கூறுபோடுவதாக ஒரு போதுமிருக்காது. அவர் விரும்புகிறபடி, விரும்பும் இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும். அவரது …

எழுத்தின் தோழமை. Read More »

Article 15

அனுபவ் சின்ஹா இயக்கி ஆயுஷ்மான் குரானா நடித்த Article 15 படம் பார்த்தேன். சமகால இந்திய சினிமாவின் சாதனைப்படங்களில் ஒன்று. சாதிய அரசியலை நேரடியாகப் பேசும் படம்.  சாதியத்தின் வேர்கள்  எங்கெல்லாம் புதைந்திருக்கின்றன என்பதைப் படம் துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. காவல்துறையின் சாகசங்களை மட்டுமே திரையில் பார்த்துப் பழகிய பொதுமக்களுக்கு இந்தப்படம் காட்டும் உண்மை முகத்தில் அறைவது போலிருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் அயன் ரஞ்சன் (ஆயுஷ்மான் குரானா )நேரடியாகத் தன்னோடு பணியாற்றுகிறவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று …

Article 15 Read More »

ஸ்பீல்பெர்க்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படத்தைக் கண்டேன். Susan Lacy இயக்கியுள்ளார் . 2h 27min ஒடக்கூடியது ஸ்பீல்பெர்க்கின் திரைப்படங்களுக்குப் பின்னே சொந்த வாழ்வின் தடயங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை அவரது உரையாடலின் வழியே அறிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் 1946ல் பிறந்தவர் ஸ்பீல்பெர்க் அவரது தந்தை கணிணி தயாரிப்பில் ஈடுபட்ட  என்ஜினியர். அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பவர். தந்தையின் செல்லமாக வளர்ந்தார் ஸ்பீல்பெர்க். அவரது தாய் Leah Adler தந்தையின் …

ஸ்பீல்பெர்க் Read More »

லிவ் உல்மான்.

Liv & Ingmar என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் திரைப்பட நடிகை லிவ் உல்மானைக்(Liv Ullmann)காதலித்து அவருடன் வாழ்ந்தார் இயக்குநர் இங்மர் பெர்க்மென். அவரது படங்களில் முக்கிய வேஷங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் லிவ் உல்மான். தங்களின் திருமண உறவு மற்றும் தீவு வாழ்க்கை, பிரிவு, பெர்க்மெனை இறுதிக்காலத்தில் மறுபடி சந்தித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு அந்தத் தீவிற்குத் திரும்பப் போன நினைவுகள் என்று தன்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறார் லிவ் உல்மான். இத்தனை …

லிவ் உல்மான். Read More »

கிராஸ்தமியின் நாய்

பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே. களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம். மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன. நிக்கலாஸ் …

கிராஸ்தமியின் நாய் Read More »

விண்ணாளும் பெண்கள்.

புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யான் படம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்திய விண்வெளி சரித்திரத்தில் மங்கள்யானுக்கு தனியிடம் உண்டு. மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் வழியே, முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைத்தது. மங்கள்யானை வடிவமைத்து, தயாரிக்க இந்தியா …

விண்ணாளும் பெண்கள். Read More »

அனுப்பபடாத கடிதம்.

The Cranes Are Flying மற்றும் I Am Cuba படங்களின் மூலம் சர்வதேசப்புகழ்பெற்ற இயக்குநராகக் கொண்டாடப்பட்ட மிகையில் கலடோசோவ் (Mikhail Kalatozov) சோவியத் சினிமாவின் தனிப்பெரும் இயக்குநராவார். கலடோஸோவ் பொருளாதாரம் படித்தவர், நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாகச் திரைத்துறையிற்குள் பிரவேசித்தார். நடிகராகச் சில படங்களில் பணியாற்றிய பிறகு ஒளிப்பதிவின் மீது தீவிர ஈடுபாடு உருவாகவே தன்னை ஒரு ஒளிப்பதிவாளராக உருவாக்கிக் கொண்டார். இவரது திரைப்படங்கள் யாவும் ஒளிப்பதிவின் உன்னதமாக இருப்பதே அதுவே முதற்காரணம். புதியதொரு திரைமொழியை …

அனுப்பபடாத கடிதம். Read More »

திரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை

ஒரு திரைக்கதை எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அகிரா குரசேவாவின் திரைக்கதையாசிரியர் ஷினோபு ஹஷிமோடோ எழுதிய Compound Cinematics: Akira Kurosawa and I என்ற புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும். இந்நூலின் வழியே அகிரா குரசேவா எவ்வாறு திரைக்கதையை எழுதுகிறார் என்பதை அறிந்து கொள்வதுடன் அவருடன் இணைந்து பணியாற்றிய திரைக்கதையாசிரியர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள் என்பதையும் துல்லியமாக அறிந்து கொள்ளமுடிகிறது. அகிரா குரசேவாவின் ரஷோமான் படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் ஹஷிமோடோ . …

திரை எழுத்து- 2 . ரஷோமானின் திரைக்கதை Read More »

டேவிட் லீனின் காந்தி

ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை இயக்குவதற்குப் பல ஆண்டுகள் முன்பாகக் காந்தி திரைப்படத்தை இயக்க விரும்பினார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் லீன். இதற்காக இந்தியாவிற்கு வருகை தந்து நேருவைச் சந்தித்து உரையாடி காந்தி குறித்து விரிவான ஆய்வுகளையும் செய்தார். ஆனால் அவர் விரும்பியது போலக் காந்தி திரைப்படத்தை உருவாக்க இயலவில்லை. ஆகவே காந்தியைக் கைவிட்டு தயாரிப்பாளர் விரும்பிய லாரன்ஸ் ஆப் அரேபியா படத்தை இயக்கினார். அப்படம் திரை வரலாற்றில் பெரும் காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. ஒரு …

டேவிட் லீனின் காந்தி Read More »