சினிமா

காதம்பரி தேவியின் காதல்

ரவீந்திரநாத் தாகூருக்கும் அவரது அண்ணி காதம்பரி தேவிக்குமான நட்பையும் காதலையும் விவரிக்கும் காதம்பரி (Kadambari) என்ற வங்காளப்படத்தைப் பார்த்தேன். சுமன் கோஷ் இயக்கியது . காதம்பரி தேவியாக நடித்திருப்பவர் கொங்கனா சென். காதம்பரி தேவி பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா Pratham Alo நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். தாகூரின் இந்த காதல் உறவு குறித்தும் இன்றும் சர்ச்சை தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. தாகூரின் சகோதரர் ஜோதிரிந்திரநாத்தின் மனைவியே காதம்பரி தேவி. தாகூரை விடவும் இரண்டு வயது சிறியவர் . …

காதம்பரி தேவியின் காதல் Read More »

குதிரைகள் பின்னோக்கி ஓடுவதில்லை.

Sergio Leone: The Way I See I Things என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். A Fistful of Dollars, The Good, the Bad, and the Ugly , Once Upon a Time in the West, Once Upon a Time America போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் செர்ஜியோ லியோனி. இவரது திரையுலக வாழ்க்கை மற்றும் நினைவுகளை அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். செர்ஜியோ லியோனியின் …

குதிரைகள் பின்னோக்கி ஓடுவதில்லை. Read More »

பாலைவனத்தின் நாயகன்

டேவிட் லீன் இயக்கிய லாரன்ஸ் ஆஃப் அரேபியா ( Lawrence of Arabia )படத்தின் Uncut Original version 228 minutes ஓடக்கூடியதைப் பார்த்தேன்.  எனக்கு மிகவும் விருப்பமான படம். இது வரை நாற்பது ஐம்பது முறை பார்த்திருப்பேன். ஆனால் இப்போது தான் அதன் Uncut Original version பார்க்கிறேன். தியேட்டரில் இந்தப்படம் 36 நிமிஷம் குறைவாக்கப்பட்டு வெளியானது. தற்போது முழுமையான ப்ளுரே டிஸ்க் காணக் கிடைக்கிறது. ஹாலிவுட் சினிமாவின் உச்சபட்ச சாதனைகளில் ஒன்றாகவே இப்படத்தைக் கருதுகிறேன். …

பாலைவனத்தின் நாயகன் Read More »

டோல்கீன் உருவாகிறார்.

டோல்கீன் எழுதிய த லார்ட் ஆப் த ரிங்ஸ் (The Lord of the Rings) நாவல் 56 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 250 மில்லியன் பிரதிகள் விற்றுச் சாதனை செய்திருக்கிறது.. கனடாவில்  டோல்கீனின்  பெயரில் ஒரு வீதியிருக்கிறது. விசித்திரப் புனைவெழுத்தின்   சாதனை நாயகராகவே டோல்கீன் கருதப்படுகிறார். 1993ல் சென்னையிலுள்ள அமெரிக்கன் சென்டர் நூலகத்தில் ஒரு நாள் கவிஞர் பிரமீளைச் சந்தித்த போது அவர் The Lord of the Rings நாவலைப் பற்றிச் சொல்லி டோல்கீனைப் …

டோல்கீன் உருவாகிறார். Read More »

சர்ச்சிலின் சினிமா

“சர்ச்சில் அண்ட் தி மூவி மொகல்” என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் இயக்குநரான அலெக்சாண்டர் கோர்டாவிற்கும் சர்ச்சிலுக்குமான நட்பையும், சினிமாவின் மீது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இருந்த ஆசையையும்விவரிக்கிறது இந்த ஆவணப்படம் . ஹங்கேரியிலிருந்து இங்கிலாந்திற்குக் குடியேறிய யூதக்குடும்பத்தைச் சார்ந்தவர் அலெக்ஸாண்டர் கோர்டா. பிரிட்டீஷ் திரையுலகில் The Thief of Baghdad , The Third Man போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை உருவாக்கினார். இங்கிலாந்தின் தேசபக்தியை உயர்த்திப் பிடித்தவர் என்றே இவரைத் திரையுலகம் குறிப்பிடுகிறது. ஜான் ஃப்ளீட் தயாரித்துள்ள …

சர்ச்சிலின் சினிமா Read More »

அமைதியின் அடையாளம்.

ருமேனிய இயக்குனர் ஹோராட்டியு மலேலின் (Horațiu Mălăele) புதிய படம் Silent Wedding. அட்ரியன் லுஸ்டிக் மற்றும் ஹோராட்டியு மலேலே ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ருமேனியாவின் ஒரு சிறிய கிராமத்தில் 1953ல் நடந்த ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. ருமேனிய கிராமம் ஒன்றை நோக்கித் தொலைக்காட்சி குழுவினர் வருகிறார்கள். அந்த ஊரில் வயதான பெண்கள் மட்டுமே வசிக்கிறார்கள், ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வு நடந்து முடிந்துள்ளது என்பதைப் போலிருக்கிறது. கைவிடப்பட்ட ஊராக உள்ள …

அமைதியின் அடையாளம். Read More »

மியாசகியின் கம்பளிப்பூச்சி.

Never-Ending Man: Hayao Miyazaki என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட இயக்குநர் மியாசகியின் வாழ்க்கை மற்றும் புதிய திரைப்படத்தின் தயாரிப்பு முயற்சிகள் குறித்த ஆவணப்படமிது. செப்டம்பர் 2013 இல், மியாசகி தனது முதுமை காரணமாகத் திரைப்படத் தயாரிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இந்த ஆவணப்படம் அவரது ஓய்வு குறித்த அறிவிப்பிலிருந்து துவங்குகிறது. உலக சினிமா வியந்து பார்க்கும் ஆளுமையான மியாசகி பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார். அதில் கையால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் …

மியாசகியின் கம்பளிப்பூச்சி. Read More »

செங்கிஸ்கானின் பாடல்

The Story of the Weeping Camel என்ற புகழ்பெற்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய பைம்பசுரான் டாவா (Byambasuren Davaa) வின் அடுத்தப் படமான Two Horses of Genghis Khan என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2009ல் வெளியான படமிது. மங்கோலியத் திரைப்பட இயக்குனரான பைம்பசுரான் டாவா ஜெர்மனியில் வசிக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியவர் டாவா. சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் மங்கோலிய மக்களின் மரபும் பண்பாடும் ஒடுக்குமுறைக்கு ஆளானது. மங்கோலிய நாட்டுப்புற இசை …

செங்கிஸ்கானின் பாடல் Read More »

தொடரும் பயணம்.

1862ல் தஸ்தாயெவ்ஸ்கி ஐரோப்பியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். பீட்டர்ஸ்பெர்க்கில் கிளம்பி பெர்லின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் என நீண்டது அப்பயணம். இரண்டரை மாத காலப் பயணமது. இந்தப் பயணத்தின் வழியாக ஐரோப்பியப் பண்பாடு மற்றும் சமூக நிலையைப் பற்றித் தஸ்தாயெவ்ஸ்கி அறிந்து கொண்டார். Winter Notes on Summer Impressions என இந்தப் பயணத்தைப் பற்றிச் சிறிய நூல் ஒன்றையும் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார். அதே பயணத்தைத் தற்போது தஸ்தாயெவ்ஸ்கியின் கொள்ளுப்பேரன் டிமிட்ரி மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார். அதை …

தொடரும் பயணம். Read More »

சோல்செனிட்சினுடன் உரையாடல்

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர். திரைக்கலையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞர். இவரது திரைப்படங்களை  poetic cinema என்கிறார்கள். சுக்ரோவ்  தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்டவர்.  ரஷ்யாவின் மனசாட்சியாகத் திகழுகிறார் என்று திரை விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். இவரது Russian Ark ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட சிறந்த திரைப்படம். பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள ஹெர்மிடேஜ் ம்யூசியத்தினுள் முழுப்படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைநேர்த்தி மிக்கத் திரைப்படமது. சுக்ரோவ் ஹிட்லரை மையாக வைத்து Moloch என்ற படத்தை இயக்கினார். இது போலவே லெனினை …

சோல்செனிட்சினுடன் உரையாடல் Read More »