சினிமா

பூமியின் மாற்றங்கள்

Humans now change the Earth and its systems more than all natural processes combined – Anthropocene ANTHROPOCENE: The Human Epoch என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைக் கண்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஆறு கண்டங்களில் 20 நாடுகளுக்குப் பயணம் செய்து மனிதர்கள் பூமியில் ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். வியப்பூட்டும் காட்சிகளும் அதிர்ச்சி தரும் தகவல்களும் நிரம்பிய அரிய ஆவணப்படமிது.  இப் படத்தை உருவாக்க நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்கள். கென்யாவின் நைரோபியில் …

பூமியின் மாற்றங்கள் Read More »

போர்க்களத்தில் ஒரு பயணம்.

நேற்றிரவு ஐமாக்ஸ் திரையரங்கில் 1917 திரைப்படம் பார்த்தேன். முதல் உலகப்போரின் போது யுத்தமுனைக்கு அவசரச் செய்தி ஒன்றினை கொண்டு செல்லும் இரண்டு ராணுவ வீரர்களின் பயணமே திரைப்படம். பத்து வரிக்குள் அடங்கிவிடும் கதையது. ஆனால் அதைப் படமாக்கிய விதம் மிகப்பிரம்மாண்டமாக உருமாறியுள்ளது. முதலாம் உலகப் போரின் கொந்தளிப்பின் மத்தியில் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் துருப்புக்களைப் பிரிக்கும் வடக்கு பிரான்சிலுள்ள No mans land சுற்றியே கதை நடைபெறுகிறது. இரண்டு இளம் ராணுவ வீரர்களான பிளேக் மற்றும் ஸ்கோஃபீல்ட் …

போர்க்களத்தில் ஒரு பயணம். Read More »

உடலில் தோன்றும் மலர்கள்.

She was off like a bird, bullet, or arrow, impelled by what desire, shot by whom, at what directed, who could say? – Virginia Woolf ** Vita and Virginia என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf,) குறித்த திரைப்படமது. வர்ஜீனியா வுல்ஃப்பை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினா பிம்பம் வந்து போகிறது. வர்ஜீனியா வுல்ஃப்பின் …

உடலில் தோன்றும் மலர்கள். Read More »

பறவைகளின் பாதை.

ஒரு படத்தின் துவக்கக் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக இருந்துவிட்டால் அது ஒட்டுமொத்த படத்திற்குமான மனநிலையை உருவாக்கிவிடும் என்பதற்கு நேற்று பார்த்த Birds of Passage படமே சான்று . சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இதுவே மிகச்சிறந்த துவக்கக்காட்சி கொண்டிருக்கிறது. கொலம்பியாவின் வயு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜைதா என்ற இளம்பெண் தன்னுடைய முகத்தை மறைத்தபடியே இறக்கை போலத் தன்மேல் போர்த்தப்பட்ட சிவப்பு ஆடையை,  விரித்து ஆடுகிறாள். அவளது அனுமதியுடன் ஒரு ஆண் அவளைப் பின்னோக்கி வட்டமிடுகிறான். …

பறவைகளின் பாதை. Read More »

பறக்கும் புத்தகங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமான THE FANTASTIC FLYING BOOKS OF MR. MORRIS LESSMORE பார்த்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் இந்தப்படம் காணக்கிடைக்கிறது. குழந்தைகள் பெரியவர் என அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காண வேண்டும். படத்தின் துவக்கத்தில் புத்தகத்தை நேசிக்கும் திரு. மோரிஸ் லெஸ்மோர் ஒரு ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் புத்தகங்கள் தான் உலகம். சொற்கள் தான் துணை. ஒவ்வொரு நாளும் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் …

பறக்கும் புத்தகங்கள் Read More »

கல்லின் கனவு.

மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ (Michelangelo-Infinito) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் இயக்குனர் Emanuele Imbucci . மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பவர் Enrico Lo Verso. ஓவியர்களையும் சிற்பிகளையும் பற்றிய திரைப்படங்களை எப்படி இத்தனை கலை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. தோற்றமும் உடையும் நடிப்பும் ஒளிப்பதிவும் அபாரம். இந்தத் திரைப்படம் மைக்கேலாஞ்சலோவின் முக்கியக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டதின் பின்புலத்தையும் அவரது காலகட்டத்தைச் சேர்ந்த சக கலைஞர்களையும், அதிகார நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்துகிறது. படத்தின் சட்டகம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்கேலாஞ்சலோ கதையை …

கல்லின் கனவு. Read More »

ஒளியே துணை

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது தேவமலர் மற்றும் மதகுரு ஆகிய நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களை க..நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். தேவமலர் எனக்கு மிகவும் பிடித்த நாவல். தேசாந்திரி பதிப்பகம் மூலம் இதை மறுபதிப்புச் செய்திருக்கிறேன் ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில் செல்மாவின் இடம் தனித்துவமானது. தொன்மங்கள், நாட்டுப்புறக்கதைகள், தேவதை கதைகள் என மண்ணிலிருந்து உருவான கதைகளின் சரட்டினைக் கொண்டு புதிய புனைவுலகை உருவாக்கியவர் செல்மா. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் …

ஒளியே துணை Read More »

பெருஞ்சுவரின் நிழல்

காணக் கிடைக்காத காட்சி என்பார்களே அது பிபிசி தயாரித்துள்ள – A Slow Odyssey: The Great Wall of China என்ற ஆவணப்படத்திற்குத் தான் பொருத்தமானது. வானில் பறந்தபடியே ஒட்டுமொத்த சீனப்பெருஞ்சுவரையும் கேமிரா வழியாக அங்குல அங்குலமாகக் காட்டுகிறார்கள். கூடவே சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றையும் விவரிக்கிறார்கள். அற்புதமான ஆவணப்படமிது. சீனப்பெருஞ்சுவரை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு ஆவணப்படம் போதும் அதன் முழுமையை நமக்குக் காட்டிவிடுகிறது. சீனப்பெருஞ்சுவர் ஒரு மன்னரால் …

பெருஞ்சுவரின் நிழல் Read More »

கும்னாமி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கடைசி நாட்களையும், அவர் விமான விபத்தில் இறந்து போனது உண்மை தானா என்பதையும் ஆராயும் விதமாகப் பெங்காலியில் கும்னாமி (Gumnaami) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக அப்படத்தைப் பார்த்தேன். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படம் நேதாஜியின் மரணம் குறித்து ஆராய உருவாக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் விசாரணையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் கறுப்பு வெள்ளையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை …

கும்னாமி Read More »

மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வாழ்க்கையை விவரிக்கும் GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன். கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அரகடகா என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்து எவ்வாறு உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மார்க்வெஸின் ஊருக்கு ரயில் வரும் காட்சியைக் காணும் போது அவரது செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற கதை நினைவில் வந்து போனது. அரகடகா வாழைத்தோட்டங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. …

மார்க்வெஸின் மஞ்சள் ரோஜாக்கள். Read More »