மண் விழித்துக்கொள்கிறது
The Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை அடைந்தேன். ஒரு டாகுமெண்டரி திரைப்படம் என்பதைத் தாண்டி இயற்கையோடு இணைந்து வாழுவதற்கான ஆதார பாடம் என்றே இதனைக் கூற வேண்டும். கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் வசித்து வந்த ஜான் மற்றும் மோலி செஸ்டர் நகரவாழ்க்கையிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிக்க முயன்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் வளர்ப்பு நாய் டோட். ஜான் ஒரு ஒளிப்பதிவாளர். …