வெர்மரின் தேவதை.
மூன்று வருடங்களுக்கு முன்பாக Girl with a Pearl Earring என்ற திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் காண நேர்ந்தது. டச்சு ஒவியரான ஜோகனஸ் வெர்மரின் வாழ்வைப் பற்றியது என்ற அறிமுகத்தோடு படம் திரையிடப்பட்டது. வெர்மரின் சில ஒவியங்களை முன்னதாகக் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது வாழ்வு குறித்த எதையும் வாசித்து அறிந்திருக்கவில்லை. அந்தப் படம் துவங்கிய சில நிமிசங்களிலே மொத்த அரங்கமும் நிசப்தத்தில் ஆழ்ந்து போனது.காலம் அப்படியே பின்னால் திரும்பி பதினேழாம் நூற்றாண்டிற்குள் நழுவிவிட்டதோ எனும்படியாக …