சினிமா

ரெட் ரிவர்

ரெட் ரிவர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்தேன்.ஹாவர்ட் ஹாக்ஸ் இயக்கிய வெஸ்டர்ன் திரைப்படம். (Howard Hawks’s Red River ) 1948ல் வெளியாகியிருக்கிறது. இன்று வெளியாகும் பிரம்மாண்டமான படங்கள் யாவும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கபடுகிறது. ஆனால் பழைய ஹாலிவுட் படங்களில் பிரம்மாண்டம் உண்மையான பல்லாயிரம் பேர்களைக் கொண்டு நேரடியாக படமாக்கபட்டு திரையில் மகத்தான அனுபவம் தருவதாக இருந்தது. அப்படி ஹாலிவுட் எபிக் எனப்படும் திரைப்படமே ரெட் ரிவர். டாம் டன்சன்  டெக்ஸாசின் பரந்த வெளியில் ஒரு பெரிய …

ரெட் ரிவர் Read More »

புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது. புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள். எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் …

புகலிடம் தேடி. Read More »

கேமிராவுடன் ஒரு துறவி.

Monk with a Camera: The Life and Journey of Nicholas Vreeland என்ற ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். புகைப்படக் கலைஞராக உள்ள புத்த துறவி ஒருவரைப் பற்றியது. நிக்கோலஸ் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரான இர்விங் பென்னால் பயிற்சியளிக்கப்பட்டவர், பௌத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் ஒரு மடாலயத்தில் பதினான்கு ஆண்டுகள் பௌத்த நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.. பௌத்த மையம் ஒன்றை உருவாக்க அவர் தனது புகைப்படக்கலையைக் கொண்டு நிதி திரட்டியிருக்கிறார் 2014 ஆம் ஆண்டு இந்த …

கேமிராவுடன் ஒரு துறவி. Read More »

புலியுடன் ஒரு தேநீர் விருந்து.

The Tiger Who Came to Tea (2019) என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். உலகப்புகழ் பெற்ற சிறார் கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சோஃபி என்ற ஒரு சிறுமி தனது அம்மாவுடன் பூங்காவிற்குக் கிளம்புகிறாள். எதிர்பாராதபடி மழை வந்துவிடுகிறது. வீட்டில் என்ன செய்வது என அம்மாவும் மகளும் கேக் செய்கிறார்கள். வீட்டிலே ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்வோம் என்கிறாள் அம்மா. அது சோஃபியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சாண்ட்விட்ச். கேக். தேநீர் என யாவும் …

புலியுடன் ஒரு தேநீர் விருந்து. Read More »

ஜமீலா

நேற்றிரவு சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chinghiz Aitmatov) எழுதிய ஜமீலா நாவலை மையமாகக் கொண்ட ஜமீலா(Dzhamiliya) திரைப்படத்தைப் பார்த்தேன். 1968ல் வெளியான இப்படத்தை இரினா போப்லாவ்ஸ்கயா மற்றும் செர்ஜி யூட்கேவிச் இயக்கியிருக்கிறார்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ”முதல் ஆசிரியர்” மகத்தான படைப்பு. அது போலவே அவரது சிவப்பு தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று, மற்றும் குல்சாரி நாவலும் சிறப்பான படைப்புகள். ஜமீலா நாவலை வாசிக்கையில் ஜமீலாவின் தோற்றம் நம் மனதில் தனித்துவமிக்கதாக எழும். அதற்கு நிகரான ஒரு பெண்ணை ஜமீலாவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். …

ஜமீலா Read More »

தங்கப் பறவையைத் தேடி

ஹாலிவுட் சினிமாவில் film noir என்ற திரைப்பட வகைக் குற்றவுலகையும் அதைக் கண்டறியும் காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களையும் முதன்மைப்படுத்தியதாகும். கறுப்பு வெள்ளையில் வெளியான film noir படங்கள் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டவை. இந்தச் சினிமா வகையில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு படம் The Maltese Falcon. டேஷியல் ஹம்மெட்டின் The Maltese Falcon நாவலை ஜான் ஹுஸ்டன் திரைப்படமாக இயக்கியுள்ளார். இது அவரது முதற்படம். ஹம்ப்ரி போகர்ட் துப்பறியும் நிபுணர் சாம் ஸ்பேடாக நடித்திருக்கிறார். 1941 இல் சான் …

தங்கப் பறவையைத் தேடி Read More »

மார்லன் பிராண்டோவும் சாப்ளினும்.

சார்லி சாப்ளின் தனது படங்களில் தானே கதாநாயகனாக நடிப்பதே வழக்கம். ஆனால் அவர் மார்லன் பிராண்டோவை நாயகனாக நடிக்க வைத்து A Countess from Hong Kong என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டுமே சாப்ளின் நடித்திருக்கிறார். நேற்றிரவு A Countess from Hong Kong பார்த்தேன். சாப்ளின் முதன்முறையாக வண்ணத்தில் உருவாக்கிய படம். சாப்ளின் இயக்கிய லைம்லைட் படம் வெற்றி பெறவில்லை. அத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வாழ்ந்த சாப்ளின் …

மார்லன் பிராண்டோவும் சாப்ளினும். Read More »

சிறுவர்களின் கனவு.

Good Morning என்ற ஜப்பானியத் திரைப்படத்தைப் பார்த்தேன். யசுஜிரோ ஓசு இயக்கியது.கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை. ஓசுவின் படங்களும் அப்படியானதே, அவரது பிரதான கதைக்களம் குடும்பம். ஜப்பானியக் குடும்ப உறவின் பல்வேறு தளங்களை விவரிப்பதே அவரது படங்கள். அது போலவே காலமாற்றம் ஜப்பானிய வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அவரது படங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ரயில் பாதைகளும் ரயிலும் யசுஜிரோ ஓசுவிற்கு மிகவும் விருப்பமானவை. அவற்றைக் குறியீடுகள் போலவே பயன்படுத்துகிறார் இப்படத்தில் 1950களில் ஜப்பானிய வாழ்க்கை …

சிறுவர்களின் கனவு. Read More »

கானகத்தின் குரல்

ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958லே பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.. பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் கானகத்தின் குரல் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன் இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது. Clark Gable நடித்து 1935ல் வெளியான படத்தையும் Charlton Heston …

கானகத்தின் குரல் Read More »

பறவைகளை அழைத்துச் செல்பவன்.

Spread Your Wings என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன். அழிந்து வரும், காட்டு வாத்து இனம் ஒன்றைக் காப்பாற்ற வேண்டி பறவையியலாளர் கிறிஸ்டியன் ஒரு ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிராகரிக்கிறது. தனது திட்டத்தைச் செயல்படுத்த விரும்பிய கிறிஸ்டியன் அலுவலக முத்திரையைத் திருடி வந்து தானே ஒரு அரசாணை போல ஒன்றைத் தயார் செய்கிறார். அவரது திட்டம், காட்டுவாத்துகளின் முட்டைகளைச் சேகரித்து அந்த வாத்துகள் பிறக்கும் நாளிலிருந்து தானே வளர்த்து அவற்றைப் …

பறவைகளை அழைத்துச் செல்பவன். Read More »