சினிமா

காதலில் தோற்றவன்.

ஜெர்ரி லூயிஸ் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். இவரது இயக்கத்தில் வெளியான தி லேடிஸ் மேன் என்ற படத்தினைப் பார்த்தேன். 1961ல் வெளியான படம். ஹாலிவுட்டின் மிகச்சிறந்த திரைப்படமிது என்று புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கோதார் கூறுகிறார். பிரெஞ்சு நவசினிமா இயக்குநர் பலரும் ஜெர்ரி லூயிஸை வியந்து கொண்டாடுகிறார்கள். சாப்ளினுக்குப் பிறகு இவரே ஹாலிவுட்டின் அசலான நகைச்சுவை நடிகர்  இயக்குநர் என்கிறார் லூயிமால் அது உண்மை என்பதற்குச் சாட்சியமாக உள்ளது இப்படம். 1961ல் இவ்வளவு பெரிய அரங்கு …

காதலில் தோற்றவன். Read More »

விலகும் இருள்.

1947ல் வெளியான Calcutta என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். John Farrow இயக்கியது. மூன்று விமானிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. கொலை செய்யப்பட்ட நண்பனைப் பற்றிய விசாரணையை மேற்கொள்ளத் துவங்கும் நீல், எப்படி குற்றவுலகின் வலைப்பின்னலில் எப்படிச் சிக்கிக் கொள்கிறான் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலகட்ட கதையிது. நீல் கார்டன் (ஆலன் லாட்), பில் கன்னிங்ஹாம் (ஜான் விட்னி) மற்றும் பிளேக் (வில்லியம் பெண்டிக்ஸ்) என்ற மூன்று அமெரிக்க விமானிகள் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் பறந்து …

விலகும் இருள். Read More »

பந்தயக்குதிரை

ஃபிராங் காப்ரா இயக்கிய ஸ்டேட் ஆஃப் தி யூனியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1948ல் வெளியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முயற்சிக்கும் ஒரு மனிதனின் விருப்பம் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்ச்சிகள் பற்றிய நாடகமே படத்தின் கதை 1948 ல் கே தோர்ன்டைக் என்ற இளம்பெண் தனது தந்தையைச் சந்தித்து உரையாடுவதில் படம் துவங்குகிறது குடியரசு கட்சியின் பத்திரிக்கை அதிபரான கே தோர்ன்டைக் எவ்வாறு தனது காதலரான கிராண்ட் மேத்யூவை அமெரிக்க அதிபர் தேர்தலில் …

பந்தயக்குதிரை Read More »

மக்களாட்சியின் குரல்

1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன் கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் …

மக்களாட்சியின் குரல் Read More »

மூன்று கடல் தாண்டி.

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன்  திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு …

மூன்று கடல் தாண்டி. Read More »

குரங்கின் ஒலி.

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் Eeb Allay Ooo. இணைய ஒளிபரப்பின் வழியாக We Are One Global Film Festival on YouTube விழாவில் இந்தப் படத்தைப்  பார்த்தேன். மும்பை திரைப்படவிழாவின் சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. Prateek Vat இயக்கியுள்ளார். புது தில்லியின் முக்கியப் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் ஏற்படும் தொல்லையைப் போக்க குரங்கு விரட்டுபவர்களை அரசாங்கமே நியமிக்கிறது. குரங்குகளை விரட்டப் பயன்படுத்தும் விசித்திரமான ஒலியே  ஈப் அலே ஓ. இந்த ஒலியைக் …

குரங்கின் ஒலி. Read More »

தேசமெனும் குடும்பம்

சிங்கப்பூரின் வரலாற்றை மையமாகக் கொண்ட உருவாக்கபட்ட  Long Long Time Ago என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். Jack Neo இயக்கிய இந்தப் படம் இரண்டு பகுதிகளாக உருவாக்கபட்டுள்ளது. 2016ல் வெளியான இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது. சீனக்குடும்பம் ஒன்றின் கதையைப் படம் விவரிக்கிறது. அந்தக் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளின வழியே தேசத்தின் முக்கிய நிகழ்வுகளை அடையாளப்படுத்துகிறார்கள். 1965ம் ஆண்டு ஜாவ் டி (Zhao di) என்ற கர்ப்பிணிப் பெண்  கணவரின் மூத்தமனைவியால்  துரத்தப்படவே …

தேசமெனும் குடும்பம் Read More »

ஒளி உண்டானது.

The current war  என்ற ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்தேன். மின்சாரம் கண்டுபிடிக்கபட்ட காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், தொழிலதிபரான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவருக்கும் இடையில் நடந்த போட்டி மற்றும் பிரச்சனைகளை முன்வைத்து அமெரிக்கா எவ்வாறு மின்சார மயமாக்கப்பட்டது என்ற வரலாற்றை விவரிக்கிறது இந்தத் திரைப்படம் தனது கண்டுபிடிப்புகளின் உரிமைக்காக எடிசன் பல்வேறு முறை நீதிமன்றம் சென்று முறையிட்டு வென்றிருக்கிறார். 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை எடிசன் பெற்றிருந்தார். ஆனாலும் எடிசனின் கண்டுபிடிப்புகளில் எல்லாமும் வெற்றிபெறவில்லை. மின்சார பல்ப், போனோகிராப், …

ஒளி உண்டானது. Read More »

டர்னரின் கடற்காட்சிகள்.

Mr Turner  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் டர்னர் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமிது. 2014ல் வெளியான திரைப்படத்தை Mike Leigh  இயக்கியிருக்கிறார். இப்படம் டர்னரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. குறிப்பாக அவரது கடைசி நாட்களை. டர்னரின் நிலக்காட்சி ஒவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக கடல் சார்ந்த ஒவியங்கள் அவரது முத்திரை ஒவியங்களாகக் கருதப்படுகின்றன.  The Slave Ship  என்ற ஒவியத்தில் தான் எத்தனை நுட்பமான சித்தரிப்புகள்.  கடலின் சீற்றமும் …

டர்னரின் கடற்காட்சிகள். Read More »

பாலைவனப் பள்ளி.

Khomreh (The Jar) என்ற ஈரானியத் திரைப்படத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு திரைப்படவிழாவில் பார்த்தேன். மிகச்சிறந்த படமது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படத்தை நேற்றிரவு இணையத்தில் பார்த்தேன். இந்த 25 ஆண்டுகளுக்குள் சினிமா எவ்வளவோ மாறியிருக்கிறது. அதன் தொழில்நுட்பமும் கதை சொல்லும் முறையும்  வளர்ந்திருக்கிறது. ஆனால் நேரடியாக, எளிமையாக, வாழ்வின் நிதர்சனத்தை சொல்லும் ஒரு படம் எத்தனை காலம் கடந்தாலும் அதன் வசீகரத்தை இழப்பதில்லை என்பதற்கு Khomreh ஒரு உதாரணம் ஈரானிய சினிமாவின் முன்னோடிப் படமாக …

பாலைவனப் பள்ளி. Read More »