சினிமா

கனவில் பிறந்த உலகம்.

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மையப்படுத்தியோ, தேவதை கதைகளையோ, விஞ்ஞானப்புனைவுகளையோ மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இதற்கு மாறாக இயற்கையின் பிரம்மாண்டத்தை, மனிதர்கள் இயற்கையோடு கொள்ள வேண்டிய உறவினை. போரின் விளைவுகளை, சிறார்களின் வியப்பூட்டும் கற்பனைகளை ஜப்பானிய அனிமேஷன் படமாக ஹயாவோ மியாசாகி உருவாக்குகிறார். அதே ஜப்பானில் வெளியாகும் அனீம் படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை தனியொரு திரைப்பட வகைமையாகும். சீனா, பிரான்ஸ் மற்றும் ஈரானிலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட அனிமேஷன் படங்களைச் சமீபமாக உருவாக்குகிறார்கள். அவை பெரிய …

கனவில் பிறந்த உலகம். Read More »

விலகும் திரை

ஒரு நடிகர் எப்படி உருவாகிறார் என்பதை அறிந்து கொள்வதற்குச் சரியான திரைப்படம் Mr. Burton. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம். மார்க் எவன்ஸ் இயக்கியுள்ளார். ஆசிரியரான பிலிப் பர்ட்டனால் கண்டறியப்பட்டு அவரது ஆதரவு மற்றும் ஊக்கத்தால் எப்படி ரிச்சர்ட் பர்ட்டன் புகழ்பெற்ற நடிகராக மாறினார் என்பதைப் படம் சிறப்பாக விவரிக்கிறது. 1940களின் முற்பகுதியில் போர்ட் டால்போட்டில் கதை நடைபெறுகிறது, தாயை இழந்த ரிச்சர்ட் மூத்த சகோதரி சிஸ் மற்றும் அவரது …

விலகும் திரை Read More »

குற்றமற்ற மகன்

தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும். லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் …

குற்றமற்ற மகன் Read More »

கடல் திரும்பும் திமிங்கலம்

ஈரானிய அனிமேஷன் இயக்குனர் ஹொசைன் மொலாயெமி மற்றும் ஷிரின் சோஹானி இயக்கத்தில் வெளியான இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது. 20 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. நான்கு கதாபாத்திரங்கள். போரின் பாதிப்பால் மனஅழுத்தம் கொண்ட தந்தை. அவரைக் கவனித்துக் கொள்ளும் மகள். கரையொதுங்கிய ஒரு திமிங்கலம். நான்காவது கதாபாத்திரமாக இருப்பது கடல். இந்தப் படத்தை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆனது என்கிறார் இயக்குநர். …

கடல் திரும்பும் திமிங்கலம் Read More »

விழித்திரு

குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் ஒருவனின் இரவு வாழ்க்கையை விவரிக்கிறது ஜாக்தே ரஹோ. 1956ல் வெளியான இந்தி திரைப்படம். எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸின் கதை. சோம்பு மித்ரா இயக்கியுள்ளார், ஒற்றை வரிக் கதையைக் கொண்டு மிகச் சிறப்பான படத்தை ராஜ்கபூர் எடுத்திருக்கிறார். கல்கத்தாவின் ஒரு இரவில் படம் தொடங்குகிறது ஏழை விவசாயியான ராஜ்கபூர் வேலை தேடி நகரத்திற்கு வருகிறார். கிராமவாசியான அவருக்குப் பெயர் கிடையாது. அவர் ஒரு அடையாளம் மட்டுமே. அவரது தோற்றத்தைக் கண்டு …

விழித்திரு Read More »

வரலாறும் கவிதையும்

சீனாவின் புகழ்பெற்ற மூன்று கவிஞர்களான வாங் வெய், லி பெய், மற்றும் காவ் ஷி வாழ்வை ஒரே திரைப்படத்தில் காண முடிகிறது. 2023ல் வெளியான Chang An என்ற அனிமேஷன் திரைப்படம் சீனக் கலை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலமான டாங் அரசமரபைக் கொண்டாடுகிறது. இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்திற்குள் ஒரு நூற்றாண்டின் வாழ்வைக் காண முடிகிறது. எட்டாம் நூற்றாண்டு சீனாவின் துல்லியமான சித்தரிப்பு. அழகிய நிலக்காட்சிகள். விழாக்கள் மற்றும் போட்டிகள். யுத்தம் நடக்கும் விதம். பழைய …

வரலாறும் கவிதையும் Read More »

உப்பின் குரல்

குஜராத்தின் கட்ச் பாலைவனப்பகுதியில் எப்படி உப்பு விளைவிக்கபடுகிறது என்பதைப் பற்றிய ஆவணப்படம். ஃபரிதா பச்சாவின் மை நேம் இஸ் சால்ட். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. ஆவணமாக்கம் எனப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என அழைக்கபடும் இந்தப் பாலைவனப் பகுதி உப்புக் கனிமங்கள் கொண்ட சதுப்பு நிலமாகும். மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்புகிறது.. அக்டோபரில் தண்ணீர் வடிந்த பிறகு, உப்பு விளைவிக்கும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இங்கே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள். கிணறு தோண்டி …

உப்பின் குரல் Read More »

கோமாளியின் ஞானம்

லைம்லைட் சாப்ளினின் மிகச் சிறந்த திரைப்படம். எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறீர்களோ அப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். மருந்தாக வேலை செய்யும். புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை உருவாக்கும். இப்படத்தின் வசனங்களைத் தனியே அச்சிட்டு சிறுநூலாக வெளியிடலாம். படத்தின் ஒரு காட்சியில் சாப்ளின் அரங்க மேடையில் உள்ள ஒரு பூவைப் பறித்துத் தனது பாக்கெட்டிலிருந்து உப்பை எடுத்து அதில் போட்டு ஆசையாக ருசித்துத் தின்னுகிறார். அது தான் சாப்ளினின் முத்திரை. பூவை ஒரு போதும் உண்ணும் பொருளாக நாம் …

கோமாளியின் ஞானம் Read More »

மறைந்திருக்கும் உண்மை

பல்வேறு தேசங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ரகசியமாக மறைந்திருக்கிறது. பல நேரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிராக வெளிப்படுகிறது என்று A Great Divide திரைப்படம் விவரிக்கிறது. பொதுவெளியில் பேசத்தயங்குகிற உண்மையை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீன் ஷிம். இந்தப் படம் பேசும் விஷயங்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் கொரியர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். 2020ல் அமெரிக்காவில் ஆசிய இனத்தவருக்கு எதிராக இனவெறி …

மறைந்திருக்கும் உண்மை Read More »

அன்பால் மட்டுமே வெல்ல முடியும்

ஸ்டான்லி கிராமர் இயக்கிய Guess Who’s Coming to Dinner 1967ல் வெளியான திரைப்படம். 58 ஆண்டுகளைக் கடந்த போதும் இன்றைக்கும் இது பொருத்தமான படமே. 1967 வரை, அமெரிக்காவின் பதினேழு மாகாணங்களில் கறுப்பின இளைஞனை வெள்ளைக்காரப் பெண் திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமாகவே கருதப்பட்டது , அந்தச் சூழலில் தான் இக்கதை நடக்கிறது. டாக்டர் ஜான் பிரெண்டிஸ் என்ற கறுப்பின இளைஞனைக் காதலிக்கும் வெள்ளைக்காரப் பெண் ஜோயி அவனைத் தனது பெற்றோர்களைச் சந்திக்க அழைத்துச் செல்வதில் …

அன்பால் மட்டுமே வெல்ல முடியும் Read More »