சினிமா

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை

The Most Precious of Cargoes என்ற பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படம் ஆஷ்விட்ஸ் யூதப் படுகொலையை மையமாகக் கொண்டது. ஆனால் வதைமுகாமின் துயரக் கதையைச் சொல்வதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வின் வழியாக யூத வெறுப்பு அந்த நாளில் எப்படி வேரோடியிருந்தது என்பதையும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய இருவரையும் பற்றி விவரிக்கிறது. மரபான தேவதைக் கதையைப் போலத் துவங்கும் திரைப்படம் வரலாற்றின் இருண்டபக்கத்தை ஆராய்கிறது அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் வரலாற்றையும் அதன் அறியப்படாத உண்மைகளையும் பேச முடியும் …

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை Read More »

நார்மனின் திட்டம்

ஹாலிவுட்டில் வங்கிக் கொள்ளை பற்றி நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. அதே கதைக்கருவைக் கொண்டு மாறுபட்ட படத்தை உருவாக்கியுள்ளார் பிரிட்டீஷ் இயக்குர் பாசில் டியர்டன். பிரிட்டிஷ் சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக இன்று கொண்டாடப்படுகிறது. The League of Gentlemen 1960ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம். ராணுவ அதிகாரியான நார்மன் ஹைட் The Golden Fleece, என்ற புத்தகத்தை ஏழு பேருக்கு ஏழு உறைகளில் போட்டு அனுப்பி வைக்கிறார், கூடவே பாதிக் கிழிக்கபட்ட ஐந்து பவுண்ட் நோட் ஒன்றையும் …

நார்மனின் திட்டம் Read More »

காதலின் மழை

A Season of Good Rain அழகான காதல் திரைப்படம். வசந்தகாலத்தில் உரிய நேரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உள்ளது. அதனைத் தனது கவிதையிலும் கவிஞர் து ஃபூ குறிப்பிடுகிறார். ஒரு ஆணும் பெண்ணும் எப்போது, எங்குச் சந்திக்கிறார்கள் என்பது காதலில் முக்கியம் என்பதையே படம் விவரிக்கிறது. கொரிய இளைஞரான டோங்-ஹா ஒரு கட்டிடக் கலைஞர். சீனாவில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு தனது நிறுவனம் சார்பாகச் செங்டு நகரத்தை மீண்டும் …

காதலின் மழை Read More »

பெத்ரோவின் உலகம்.

மெக்சிகோவின் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களையும் அவர்களின் குற்றச் செயல்களையும் சித்தரிக்கிறது Los Olvidados. லூயி புனுவல் இயக்கிய இந்தத் திரைப்படமே பின்னாளில் உலகின் கவனத்தைப் பெற்ற City of God போன்ற படங்களுக்கான அடிப்படை. பதின் வயதுப் பையன்களின் உலகை மிகவும் அசலாகப் படமாக்கியிருக்கிறார் புனுவல். ஒளிரும் நகரவாழ்க்கையின் மறுபக்கமாக இது போன்ற இருண்ட உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் புனுவல் தான் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஏழ்மையும் வறுமையும் கொண்ட வாழ்க்கையில் அவர்கள் …

பெத்ரோவின் உலகம். Read More »

கனவு தடவப்பட்ட ரொட்டி

விட்டோரியா டிசிகா சிறந்த நடிகர். சர்வதேச அளவில் அவர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கிடைத்த கவனம் அவரது நடிப்பிற்குக் கிடைக்கவில்லை. இத்தாலிய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கினார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நாடகவுலகில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பதாலே அவர் இயக்கிய படங்களில் பிற நடிகர்களிடம் சிறப்பான வெளிப்பாட்டினைப் பெற முடிந்திருக்கிறது விட்டோரியோ டி சிகா சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதில் பெரிய தொகையை இழந்திருக்கிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் வசூல் மழையைக் கொட்டின. …

கனவு தடவப்பட்ட ரொட்டி Read More »

விநோத ஒப்பந்தம்.

புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர் ஈசக் டினேசன் (கரேன் ப்ளிக்சன்) வாழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட திரைப்படம் The Pact. Bille August இதனை இயக்கியுள்ளார். இவரது Out of Africa புகழ்பெற்ற நாவலாகும். இப்படம் இரண்டு எழுத்தாளர்களுக்குள் ஏற்படும் நட்பு மற்றும் விநோத ஒப்பந்தம் பற்றியது. 1948ல் கதை நடக்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்து திரும்பிய கரேன் தற்போது டென்மார்க்கில் வாழ்கிறார். வசதியான வாழ்க்கை. பெரிய மாளிகை. பணியாளர்கள். அவரது வீடு இலக்கியச் சந்திப்புகள் நடக்கும் மையம் போலச் …

விநோத ஒப்பந்தம். Read More »

அற்ப வாழ்க்கை

. ஃபெடெரிகோ ஃபெலினியின் Il bidone அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். மதகுரு போல வேஷம் போட்டுக் கொண்டு கிராமப்புற விவசாயிகளை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பலைப் பற்றியது. ஒரு காரில் கிராமப்புறத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கும்பல் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்று அவர்கள் நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக நம்ப வைத்து நாடகம் ஆடுகிறது. அந்தச் செல்வத்தைப் புதைத்து வைத்தவன் போரில் இறந்து போய்விட்டதாகவும் புதையலை நிலத்தின் உரிமையாளரே தோண்டி எடுத்துக் கொள்ளலாம் …

அற்ப வாழ்க்கை Read More »

கார்லோஸின் பொய்கள்

கிளாடியா ரெய்னிக்கே இயக்கிய ரெய்னாஸ் Reinas (Queens) திரைப்படம் 2024ல் வெளியானது. இப்படம் பதின்வயதுப் பெண்ணின் மனநிலையை, உணர்ச்சிகளை, ரகசியங்களை மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளது. பதின்வயது பெண்ணான அரோரா தனது தோழிகளுடன் உரையாடும் விதம். தங்கை லூசியாவிடம் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அம்மாவிற்கும் மகளுக்கும் வரும் சண்டை. உணவகத்தில் சாப்பிடும் விதம் எனப் படம் நிஜமான உணர்ச்சிகளை, நிஜமான விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. அரோரா மற்றும் லூசியா இருவரும் அழகான கதாபாத்திரங்கள். 1992 ஆம் ஆண்டு லிமா …

கார்லோஸின் பொய்கள் Read More »

காஷ்மீரின் குரல்

டேனிஷ் ரென்சு இயக்கிய சாங்ஸ் ஆஃ பாரடைஸ் காஷ்மீரின் புகழ்பெற்ற பாடகியான ராஜ் பேகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. மிக நேர்த்தியாக உருவாக்கபட்ட திரைப்படம். படத்தில் ராஜ் பேகம் நூர் பேகமாக மாற்றப்பட்டிருக்கிறார். இளமைக்கால நூர் பேகமாக நடித்துள்ள சபா ஆசாத் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது உடல்மொழி மற்றும் உடகள் குருவின் முன்னால் அமர்ந்து பாடும் விதம், மேடையில் பாடும் முறை என அற்புதமாக நடித்துள்ளார். சபா ஆசாத் நிஜமான பாடகி என்பதால் அந்தக் …

காஷ்மீரின் குரல் Read More »

நெருப்பின் சாட்சியம்

இன் தி ஃபயர் ஆஃப் வார் நியூசிலாந்து பூர்வகுடிகளான மாவோரி இனத்தின் கடைசி யுத்தத்தை மையமாகக் கொண்டது. 1864 ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பிரிட்டிஷ் ராணுவம் ஒராக்காவ் என்ற இடத்தில் மாவோரி படைகளைத் தாக்கியது. அந்த நிகழ்வினை தான் படம் விவரிக்கிறது. இந்தப் போர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 1864 வரை தே அவமுட்டுவிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஹிகிஹி நகருக்கு அருகில் நடந்தது 1840 இல், மாவோரி தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் …

நெருப்பின் சாட்சியம் Read More »