இணைந்த கரங்கள்.
Made in Bangladesh என்ற பங்களாதேஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். டாக்காவிலுள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களின் அவல வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய ஆயுத்த ஆடை ஏற்றுமதியாளராகப் பங்களாதேஷ் விளங்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பங்களாதேஷின் ஆயுத்த ஆடைத் தொழில் 19 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை ஆயுத்த ஆடை வணிகம் பெறுகிறது. ஆயுத்த ஆடைத் தொழிலில் 4.4 …