அறிவிப்பு

சாத்தூர் கல்லூரியில்

நேற்று சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு  கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இலக்கியவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். கல்லூரியின் முதல்வர் டாக்டர். சே.கணேஷ்ராம் அவர்கள் தலைமை உரையாற்றினார். முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு.V.அழகிரிசாமி அவர்கள் முன்னிலை வகித்து  சிறப்பாகப் பேசினார். திரு.சந்திரகாந்தன் கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிமுகம் செய்தார் இந்த நிகழ்வினை டாக்டர் அறம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன்.  தந்தையைப் …

சாத்தூர் கல்லூரியில் Read More »

சென்னையும் நானும் – 1

சென்னையும் நானும் என்ற வீடியோ தொடரின் முதற்பகுதி இன்று வெளியாகியுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இத் தொடர் வெளியாகும். தேசாந்திரி youtube சேனலில் இதைக் காணலாம் முதற்பகுதி : https://youtu.be/GFB_TvClSCQ 22/11/2019

வாசகர் சந்திப்பு

கோவை ஒடிஸி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. புத்தகக் கடையினுள் உள்ள சிறிய இடம் என்பதால் நிறைய பேருக்கு இருக்கை போட முடியவில்லை. நின்று கொண்டே உரையைக்கேட்டார்கள். ஒரு மணி நேர உரையும் அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் ஒடிஸி போன்ற நிறுவனம்  தமிழ் புத்தகங்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டிற்குரிய விஷயம். 21.11.2019

தேசாந்திரி YouTube சேனலில்

சென்னையும் நானும் குறித்த புதிய  முன்னோட்டம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோத் தொடர் தேசாந்திரி YouTube  சேனலில் வெள்ளிகிழமை  தோறும் வெளியாகும். தொடரைக் காணுவதற்கு தேசாந்திரி YouTube சேனலை  subscribe செய்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 •• சென்னையும் நானும் முன்னோட்டம் 2 LINK https://youtu.be/s4oIeSnDSSE DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1

கோவையில்

எனது புதிய நாவலான ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த கலந்துரையாடல்  கோவையில் நடைபெறவுள்ளது. வாசக சாலை நடத்தும் இந்த நிகழ்வு  டிசம்பர் 24 ஞாயிறு  மாலை பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.

சென்னையும் நானும்

நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனது சென்னை  அனுபவங்களை  ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வாரம் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதில்  சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும்  பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன். இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது சென்னையும் நானும் முன்னோட்டம் https://youtu.be/70svcZnlR9U ••• …

சென்னையும் நானும் Read More »

கோவையில்

நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர்  ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத  விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••