அறிவிப்பு

தேசாந்திரி அரங்கு

சென்னை புத்தகத் திருவிழா ஜனவரி 9 முதல் 21 வரை நடைபெறுகிறது. அதில் தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 புத்தகக் கண்காட்சி நடைபெறும் எல்லா நாட்களிலும் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். •

தஸ்தாயெவ்ஸ்கி உரை

நேற்று நூல்வனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தஸ்தாயெவ்கியுடன் ஒரு இரவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.  நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த அகரமுதல்வனுக்கும், மணிகண்டனுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வினைப்  படமாக்கிய ஸ்ருதி டிவிக்கு அன்பும் நன்றியும். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி அகரமுதல்வன்.

யாமம் – மலையாளம்

எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது

மை டியர் செகாவ்

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள  மை டியர்  செகாவ் குறும்படம் YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காணும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் chekhov short film link https://youtu.be/XzQhtG39qng

யாவரும்

ஜனவரி 5 மாலை சென்னை இக்சா மையத்தில் நடைபெறவுள்ள யாவரும் பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் இளம் படைப்பாளிகளின் 11 நூல்கள் வெளியாகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புதிய நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  இளந்தலைமுறை படைப்பாளிகள் சிறப்பாக எழுதுகிறார்கள். புதிய தடத்தில் பயணிக்கும் அவர்களை  மனம் நிரம்ப வாழ்த்துகிறேன். புதிய படைப்பாளிகளை இனம் கண்டு பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்.

நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்கள் கனவுகள்  யாவும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். •• புத்தாண்டின் துவக்கமாக இன்று மாலை (1.1.2010  ) தஸ்தாயெஸ்கியின்  நாட்குறிப்புகள் குறித்து உரை நிகழ்த்துகிறேன் ஜனவரி மூன்றாம் தேதி மாலை அடையாறு ஒடிசி புத்தக கடையில் எனது சிறுகதை தொகுப்பான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் அறிமுக விழா மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது ஜனவரி  ஐந்தாம் தேதி  …

நல்வாழ்த்துக்கள் Read More »

எனது உரை

ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் எனது உரை, https://youtu.be/yXUuhNP-rkQ