எனது உரை
தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு – எஸ்.ரா சிறப்புரை காணொளி : https://youtu.be/h2k295_iyUc
தஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒரு இரவு – எஸ்.ரா சிறப்புரை காணொளி : https://youtu.be/h2k295_iyUc
Political History of the Madura Country J.H. Nelson மதுரையின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் முக்கியமான ஆவணம். இதனை ச. சரவணன் மொழியாக்கம் செய்திருக்கிறார் மதுரையின் அரசியல் வரலாறு 1868 என அந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள் மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் எனப் பலரும் ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நாட்களில் நடந்த போர்கள். மற்றும் கிறிஸ்துவ மெஷினரிகளின் வருகை. சமய மாற்றம் சார்ந்த சண்டைகள். மதுரை நகரில் நடந்த முக்கிய …
கவிஞரும் சிறுகதையாசிரியருமான அகரமுதல்வன் ஈழப்போர் குறித்த காத்திரமான படைப்புகளை எழுதிவருபவர். உலகின் மிக நீண்ட கழிவறை அகரமுதல்வனின் குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு . இதனை நூல் வனம் வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு ‘அகல்’ குறுநாவல் தடுப்பு முகாமில் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞனின் கடந்தகால நினைவுகளையும் நிகழ்கால சிக்கல்களையும் விரிகிறது. ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியாத அகதியின் பரிதவிப்பை, துயரத்தைப் பேசுகிறது ‘எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல். சந்தேகத்தின் கண்கள் தன்னை எப்போதும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அகதி …
புனைவின் புதிய உச்சங்களை உருவாக்கும் தனித்துவமிக்கப் படைப்பாளி. பா.வெங்கடேசன். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் ஆகிய நாவல்கள் முற்றிலும் புதிய புனைவுவெளியைக் கொண்டவை. வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’காதலையும் காமத்தையும் கனவுகள் மற்றும் ரகசிய இச்சைகளின் வழியே ஆராய்கிறது. வாரணாசியை ஒரு குறியீடு போலவே வெங்கடேசன் முன்வைக்கிறார் பவித்ரா தன் கணவனைப் பழிவாங்குவதற்காகத் தன் உடலின் நிர்வாணத்தைப் புகைப்படமாக்கி வெளியிடுகிறாள். உடலுறவு மறுக்கப்படுவதும் உடல் காட்சிப்படுத்தபடுவதும் பவித்ராவின் இரண்டு பக்கங்கள் போல முன்வைக்கப்படுகின்றன. காமத்தின் கொந்தளிப்பை …
விலாஸ் சாரங் எனக்குப் பிடித்த மராத்தி எழுத்தாளர். ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதியவர். மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்தவர். இவரது சிறுகதைகள் The Women in Cages: Collected Stories என்ற தொகுப்பாக வந்துள்ளது. அது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியிருக்கிறேன். விலாஸ் சாரங் எழுதிய The Dhamma Man என்ற நூலை தம்மம் தந்தவன் என்ற பெயரில் காளிப்ரஸாத் மொழியாக்கம் செய்திருக்கிறார் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது புத்தரின் வாழ்க்கை வரலாற்றை …
நவீன ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் குறைவு. அதிலும் மேற்கத்திய ஓவியங்களின் வகைமை மற்றும் சிறப்புகள் குறித்து எழுதப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஓவியம் : தேடல்கள், புரிதல்கள் என்ற நூலை ஓவியர் கணபதி சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். இதில் ஓவியங்கள் குறித்த நாற்பது கட்டுரைகள் உள்ளன. நூலை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். ஓவியங்களின் அடிப்படைகள், ஓவியத்தினை ரசிக்கும் விதம். அழகியல், கோட்பாடுகள். உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் ஆளுமைகள் என்று ஓவிய உலகின் முப்பரிமாணத்தையும் விவரிப்பதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. “ஒரு …
The Book of Imaginary Beings என்ற போர்ஹெஸின் கற்பனை உயிரினங்களைப் பற்றிய கையேட்டினைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் கார்த்திகை பாண்டியன். தனது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகினை வளப்படுத்தி வரும் அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள். கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள், சீனாவின் புராணங்கள், இஸ்லாமிய மற்றும் பௌத்த சமயத்தில் இடம்பெற்றுள்ள கற்பனையான விலங்குகள் எனப் பல்வகையான கற்பனா ஜீவராசிகளைக் குறித்த ஒரு கையேட்டினை உருவாக்கியதன் மூலம் புனைவின் விசித்திரங்களை …
இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள் ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது. ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள் இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன. “காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் …
வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன். ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை. கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன. சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே …
2019’ல் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களை பரிந்துரை செய்கிறேன் •• பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும், காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன. ஜம்பு என்ற …