கால்வினோ உரை

டிசம்பர் 25 மாலை எனது புத்தக வெளியீட்டின் போது இதாலோ கால்வினோ குறித்து சிறப்புரை நிகழ்த்த திட்டமிட்டிருந்தேன்.

கால அவகாசம் குறைவாக உள்ளதால்  அதைத் தனிநிகழ்வாக பிப்ரவரி முதல்  வாரம் நிகழ்த்த முடிவு செய்துள்ளேன்.

இதாலோ கால்வினோவின் எழுத்துமுறை, மற்றும் அவரது முக்கிய நாவல்கள். கட்டுரைகள் குறித்த உரையாக அதை அமைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.  இதற்காக மறுபடியும் அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்க வேண்டும். ஆகவே கால அவகாசம் தேவைப்படுகிறது

டிசம்பர் 25ல் எனது ஏழு புதிய நூல்கள் வெளியாகின்றன.

முக்கிய படைப்பாளிகள்  பலரும் அதில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்

நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••

0Shares
0