யாமம் – மலையாளம்
எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது
எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஜனவரி கடைசிவாரம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது
எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படம் YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காணும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் chekhov short film link https://youtu.be/XzQhtG39qng
ஜனவரி 5 மாலை சென்னை இக்சா மையத்தில் நடைபெறவுள்ள யாவரும் பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் இளம் படைப்பாளிகளின் 11 நூல்கள் வெளியாகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புதிய நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இளந்தலைமுறை படைப்பாளிகள் சிறப்பாக எழுதுகிறார்கள். புதிய தடத்தில் பயணிக்கும் அவர்களை மனம் நிரம்ப வாழ்த்துகிறேன். புதிய படைப்பாளிகளை இனம் கண்டு பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்கள் கனவுகள் யாவும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். •• புத்தாண்டின் துவக்கமாக இன்று மாலை (1.1.2010 ) தஸ்தாயெஸ்கியின் நாட்குறிப்புகள் குறித்து உரை நிகழ்த்துகிறேன் ஜனவரி மூன்றாம் தேதி மாலை அடையாறு ஒடிசி புத்தக கடையில் எனது சிறுகதை தொகுப்பான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் அறிமுக விழா மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது ஜனவரி ஐந்தாம் தேதி …
ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் எனது உரை, https://youtu.be/yXUuhNP-rkQ
சென்னையும் நானும் காணொளித் தொடரின் 6 வது பகுதி வெளியாகியுள்ளது Chennaiyum Nanum Episode-6 https://youtu.be/eVYklZ3Cu88
புத்தாண்டினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் அளிக்கும் சிறப்பு சலுகை
1.1. 2020, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். புத்தாண்டில் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சி தரக்கூடியது. தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி முன்னதாக மூன்று உரைகள் பேசியிருக்கிறேன். மூன்றும் விரிவான உரைகள். அதன் காணொளியை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்புகளை நூல்வனம் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் சா.தேவதாஸ். இதற்கான அறிமுகக் கூட்டத்தை நூல்வனம் ஏற்பாடு செய்துள்ளது தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், சைபீரிய சிறைச்சாலை இரவுகள், சூதாடுவதற்காக பேடன் பேடனில் காத்திருந்த …
நேற்று எனது புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. புத்தகங்களை மிகச்சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டனுக்கும். வடிவமைத்த ஹரி பிரசாத், குரு, முன்னோட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த கபிலா காமராஜ், அலுவலக மேலாளர் அன்பு கரண், நிகழ்விற்குத் துணை செய்த விக்கி, ஓவியர் பிள்ளை, தென்றல் சிவக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நிகழ்வை ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்த ஸ்ருதி டிவி கபிலனுக்கும். ரஷ்யக் கலாச்சார மையத்தின் தங்கப்பன் அவர்களுக்கும், பத்திரிக்கை, இணையம் மற்றும் …
டிசம்பர் 25 மாலை ரஷ்யக்கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழாவில் மூன்று நூல்களின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகின்றன •• உறுபசி நாவலை பேராசிரியர் வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் P. ராம்கோபால் கிறுகிறுவானம் என்ற சிறார் நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் G. கீதா. மூன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் •• 22.12.2019