அறிவிப்பு

தெலுங்கில்

ஒலைக்கிளி என்ற எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர் ஜி. பாலாஜி

அலெக்ஸ் பால் மேனன்

நேற்று விகடன் நம்பிக்கை விருது விழாவில் அலெக்ஸ் பால் மேனன் IAS அவர்களைச் சந்தித்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சில தினங்களுக்கு முன்பாக அவர் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கிற்கே வந்திருந்தார் என்றார்கள். அன்று சந்திக்க முடியவில்லை. ஆனால் நேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு தேடித்தேடி படித்திருக்கிறார். இலக்கியத்தின் மீது எவ்வளவு பற்றுதல் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பழங்குடி மக்கள் நிரம்பிய பகுதியில் பணியாற்றியவர் என்பதால் அவரது …

அலெக்ஸ் பால் மேனன் Read More »

யாமம் வெளியீடு

எனது யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் பிப்ரவரி 1 , 2020  மாலை திருவனந்தபுரத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக நான் திருவனந்தபுரம் வருகிறேன். பிப்ரவரி 1 மற்றும் 2  ஆகிய இரண்டு நாட்களும் திருவனந்தபுரத்தில் இருப்பேன்

நன்றி நண்பர்களே

புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவுபெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடியதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதும், அன்பைப் பெற்றதும் மறக்க முடியாதது. இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் என்ன நன்றி சொல்லிவிட முடியும். என் கைகளைப் பற்றிக் கொண்டு வாசகர்கள் பேசிய சொற்கள் தான் என் எழுத்திற்கான உண்மையான அங்கீகாரம். விருது. இந்த அன்பின் துணை தான் ஒரு எழுத்தாளனாக என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. இந்த ஆண்டு நிறைய இளைஞர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் …

நன்றி நண்பர்களே Read More »

ரஷ்ய இலக்கியங்கள்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மக்கள் ரஷ்ய இலக்கியங்களைப் பெருவாரியாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும், செகாவும் துர்கனேவும், புஷ்கினும் கார்க்கியும் இவ்வளவு ஆசையாக வாசிக்கப்படுவதைக் காணுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முப்பது பேர் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களில் என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார்கள். தமிழின் இளந்தலைமுறை தஸ்தாயெவ்ஸ்கியை, டால்ஸ்டாயை ,செகாவை வாசிக்கத் துவங்கியிருப்பது ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. ரஷ்ய இலக்கியங்களை ஆதர்சமாகக் கொண்டவன் என்ற முறையில் இதுவே …

ரஷ்ய இலக்கியங்கள். Read More »

புத்தகத் திருவிழா பரிந்துரை -1

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் என்ற அரிய நூலை நேற்று விருட்சம் கடையில் வாங்கினேன். வால்டெர் ஏரிஷ் ஷேபேர் என்ற ஜெர்மானிய நாடக ஆசிரியர் எழுதிய ரேடியோ நாடகமிது. கூத்துப்பட்டறை இந்த நாடகத்தை மேக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்திய போது கண்டிருக்கிறேன். அற்புதமான நாடகமிது. ஏ.கே. கோபாலன் பப்ளிஷர் இதை வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலின் பழைய பிரதிகள் தற்போது ரூ 25க்குக் கிடைக்கிறது. இந்த நூல் இனி மறுபதிப்பு வருவது சந்தேகமே. விருப்பமானவர்கள் உடனே விருட்சம் அரங்கில் …

புத்தகத் திருவிழா பரிந்துரை -1 Read More »

சென்னையும் நானும் -8

சென்னையும் நானும் காணொளித் தொடரின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது தேசாந்திரி youtube channel ல் இதனைக் காணலாம் இணைப்பு : https://youtu.be/gwOEoFdBKjg ••

தி இந்து நாளிதழ் தொடர்

தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகிவரும் எனது வெண்ணிற நினைவுகள் என்ற பத்தி சென்னை புத்தகத் திருவிழா முடியும் வரை வெளியாகாது. புத்தகத் திருவிழா குறித்த சிறப்பு செய்திகள் நாளிதழில் அதிகம் இடம்பெறுவதால் ஆசிரியர் குழு இதனை முடிவு செய்திருக்கிறார்கள் ஜனவரி 21க்குப் பிறகு  ஞாயிறு தோறும் பத்தி இடம் பெறும்.

புத்தகத் திருவிழா -3

புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தீராத நன்றிக்குரியது.