அறிவிப்பு

இலக்கியச் சிந்தனை விருது

2019ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடனில் வெளியான எனது சிற்றிதழ் கதையை  இலக்கியச் சிந்தனை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ளது.  இந்த தகவலை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார். சிறுகதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கும் விருது அளிக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் மிகுந்த நன்றி. எனது புதிய சிறுகதைத் தொகுதியான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

வேண்டுகோள்

எனது புத்தக வெளியீடுகள்,  இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன். மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை.  அதைப் பற்றி நான் பெரிதாக  கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன். தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன். 12 பகுதிகளாக இதன் முதற்சீசன் …

வேண்டுகோள் Read More »

ஓமானில்

சோலை வாசகர் வட்டம், நிஸ்வா-  ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871

மும்பை

மும்பை Gateway Litfest 2020 விழாவில் கலந்து கொள்கிறேன். இதற்காக பிப்ரவரி 14 முதல் 16 வரை மும்பையில் இருக்கிறேன். விருப்பமான நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.

திருவனந்தபுரத்தில்

பிப்ரவரி 1 மாலை யாமம் நாவலின் மலையாள மொழியாக்கம் வெளியீடு திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மகாராணி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் நூலை வெளியிட்டார். ISRO முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் நூலைப் பெற்றுக் கொண்டார். எம். ஆர். தம்பான். ஸ்ரீஷா சேதுராமன், டாக்டர் விலாக்குடி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு நாவல் குறித்து உரை நிகழ்த்தினார்கள். நிகழ்விற்குக் கவிஞர் சுகுமாரன், ஜி. ராஜேந்திரன் IAAS ஆகியோர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன் இல்லத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். …

திருவனந்தபுரத்தில் Read More »

ஸ்ரீதுர்காவின் உரை.

தகடூர் புத்தக பேரவையின் சார்பில் 26.01.2020 அன்று தருமபுரியில் நடைபெற்ற புத்தக அறிமுகம்-5 நிகழ்ச்சியில் எனது சிறார் நூலான முட்டாள்களின் மூன்று தலைகள் குறித்து ஸ்ரீதுர்கா என்ற சிறுமி சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். ஸ்ரீதுர்காவிற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். நிகழ்வை ஏற்பாடு செய்த தகடூர் புத்தக பேரவைக்கு அன்பும் பாராட்டுகளுக்கும்.. இணைப்பு https://youtu.be/IhNGVf5Q7i8 •• 30.1.20