அறிவிப்பு

அசோகன் செருவில் நூலில்

மலையாள எழுத்தாளர் அசோகன் செருவிலின் புளிநெல்லி ஸ்டேஷன் நூலில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் ஷாஜி.

ஆற்றூர் ரவி வர்மா

கேரள சாகித்ய அகாதமி  மறைந்த கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா குறித்த நினைவுமலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஆற்றூர் ரவி வர்மாவை நான் பலமுறை சந்தித்துப் பழகியிருக்கிறேன். திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கும்  சென்றிருக்கிறேன் எனது கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலக்காடு தினேஷ் ••

கன்னடத்தில்

THUSHARA  கன்னட மாத இதழில் எனது சிறுகதை காந்தியைச் சுமப்பவர்கள் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் கே நல்லதம்பி. ••• மார்ச்2 2020

நவீன சிற்பக்கலை

சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்ற நூலின் அறிமுக விழா மார்ச் 3 (03.03.20) செவ்வாய்கிழமை மாலை சென்னை எஸ்பிளனேட் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி குறித்து உரையாற்றுகிறேன் கும்பகோணத்தில் வசித்து வரும் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி உலகப்புகழ்பெற்றவர்.  கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் சிற்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். மரபும் நவீனமும் ஒன்று சேர்ந்த புதிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருபவர்.  இவரது படைப்புகள் குறித்து கலைவிமர்சகர் தேனுகா சிறப்பாக எழுதியிருக்கிறார். •• …

நவீன சிற்பக்கலை Read More »

வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெறும் கே.வி .ஜெயஸ்ரீக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதுணையாக இருந்த  நண்பர் பவா மற்றும் ஷைலஜாவிற்கு பாராட்டுகள்

நன்றி ஜெயமோகன்

நண்பர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எனது சென்னையும் நானும் காணொளித் தொடர் பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். கூடவே அதன் இணைப்புகளையும் தந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி. ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியுள்ள பதிவு. •• சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையும் நானும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேச ஓர் ஆவணப்படத்தன்மையுடன் அமைந்த யூடியூப் காணொளித்தொடர் இதுவரை பத்து பகுதிகள் வெளியாகியிருக்கின்றன திடீரென்று யூடியூப் பிரபலமாகிவிட்டிருக்கிறது. அதை பலபேர் பார்க்கிறார்கள் – பணமும் வருகிறது. ஆனால் பார்க்கத்தக்க …

நன்றி ஜெயமோகன் Read More »