அறிவிப்பு

வாழ்த்துகள்

வால் கவிதைத்தொகுப்பிற்காக  யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள கவிஞர் சபரிநாதனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

யாதும் ஊரே

சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குச் சிறப்பான இசை வடிவம் தந்துள்ளார் இசைக்கலைஞர் ராஜன் சோமசுந்தரம். அமெரிக்காவில் வசிக்கும் இவர் இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சங்க இலக்கியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாடல்களை மிகச்சிறப்பான இசையமைப்பில் பல்வேறு தேசங்களைச் சார்ந்த இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு உருவாக்கியுள்ளார். இது ஒரு அரிய சாதனை. நண்பர் ராஜன் சோமசுந்தரத்திற்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள். யாதும் ஊரே… யாவரும் கேளிர்’ என்ற, புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து மகத்தான இசையை உருவாக்கியுள்ளார் ராஜன் சோமசுந்தரம். பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரல் நம்மை மயக்குகிறது. கார்த்திக், …

யாதும் ஊரே Read More »

புதிய சிறுகதை

க்ளைமேட் என்றொரு சிற்றிதழை கவிஞர் வியாகுலன் துவங்கியிருக்கிறார். அதன் முதல் இதழில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்த இதழில் ஒவியர் நடேஷின் நேர்காணல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள் என்ற ஜி. குப்புசாமியின் கட்டுரை மிகவும் நன்றாகவுள்ளது ••

மாத்யமம்

இயக்குநர் கே.ஜி. ஜார்ஜ் பற்றி நான் எழுதிய கட்டுரை  மாத்யமம் மலையாள இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் நண்பர் ஷாஜி. நன்றி : ஷாஜி மாத்யமம்

நேர்காணல்

கலைஞர் தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிபரப்பான எனது நேர்காணலின் காணொளி. https://www.youtube.com/watch?v=AY66vEIcm8Y&feature=em-uploademail

அஞ்சலி

என் பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு  ஆழ்ந்த அஞ்சலிகள்.

பாலம் விருது

பாலம் கல்யாணசுந்தரம் மிகச்சிறந்த சமூகச் சேவகர்.. தன்னுடைய வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் அறக்கட்டளைகளுக்கே கொடுத்தவர். சர்வதேச அளவில்  சிறந்த மனிதர் என Man of Millinium என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றவர். அந்தப் பணம் முழுவதையும் ஏழை எளிய குழந்தைகள் நலனுக்காக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திவரும் அன்பு பாலம் என்ற சேவா அமைப்பு துறை தோறும் சாதனைகள் செய்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு …

பாலம் விருது Read More »

வாழ்த்துகள்

கோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது  எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய  வண்ணநிலவனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்

புத்தகமே டிக்கெட்

நெதர்லாந்து அரசாங்கம் தேசிய புத்தகத்தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ரயிலில் பயணிகள் டிக்கெட்டிற்குப் பதிலாக ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது புத்தகம் படிக்கிறவர்களுக்கு ரயில் பயணம் இலவசம். 1932 முதலே நெதர்லாந்து அரசாங்கம் புத்தகம் படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இலக்கிய நிகழ்வுகள், புத்தக வாசிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில நூல்களை அரசே அச்சிட்டு இலவசமாகவும் வழங்கி வருகிறது. டச்சு இலக்கியங்களை கொண்டாடும் விதமாக பத்து நாட்கள் புத்தக …

புத்தகமே டிக்கெட் Read More »