அறிவிப்பு

நேற்றைய நிகழ்வின் காணொளி

எனது இலக்கிய உரைகள். நிகழ்வுகளைக் காணொளியாகக் காண்பதற்கு தேசாந்திரி youtube சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து கொள்வதன் வழியே எனது உரைகளை நீங்கள் தொடர்ந்து காணலாம். இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் இதனை Subscribe செய்து உதவவும். To Subscribe : https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?SUB_CONFIRMATION=1 நேற்றைய குறும்படவிழாவின் காணொளி‘ https://www.youtube.com/watch?v=cOMmJcZ0QiA&feature=em-uploademail ** எனது செகாவ் பற்றிய உரை தனி இணைப்பில் இரவு வெளியிடப்படும்.

நன்றி

நேற்று மாலை எனது பையன் ஹரிபிரசாத்தின் குறும்படமான மை டியர் செகாவ் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இயக்குநர் சீனு ராமசாமி குறும்படத்தை வெளியிட்டு ஹரியையும் படக்குழுவினர்களையும் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தினார். “கதைசொல்வதற்காக நாற்காலியோடு சாலையில் சுற்றித்திரியும் ஒருவரை முதன்முறையாகத் திரையில் பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குறும்படம் நிச்சயம் திரைப்படவிழாவில் விருதுகளைப் பெறும்“ என வாழ்த்தினார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி குறும்படத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திய …

நன்றி Read More »

செகாவ் – நிகழ்ச்சி

இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. தி இந்து தமிழ்ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், ராஜன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நிகழ்வு நடைபெறும் முகவரி கவிக்கோ மன்றம் 4  இரண்டாவது மெயின் ரோடு சிஜடி நகர்.  சென்னை வழி  : அண்ணாமேம்பாலம் அடியில் மைலாப்பூர் நோக்கி  செல்லும் கதீட்ரல் சாலை வழியாக வரவும். கோபாலபுரம் பாலத்தின் அடியில் வந்தால் ம்யூசிக் அகாதமி சிக்னல். …

செகாவ் – நிகழ்ச்சி Read More »

பரிந்துரைகள்

பரிந்துரை – 1 ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அவற்றில் மிகச்சிறந்த தொகுப்பாக Selected Stories of Anton Chekhov -, Richard Pevear &, Larissa Volokhonsky என்ற மொழியாக்கத்தைச் சொல்வேன். இதில் 28 சிறுகதைகள் உள்ளன. வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டு இக்கதைகளை வாசிக்கும் போது இதன் தரமும் கவித்துவமும் சிறப்பாகப் புலப்படுகின்றன. செகாவ் கதைகளில் பெரிய திருப்பங்கள், எதிர்பாராத அம்சங்கள் கிடையாது. இம்பிரஷனிச ஒவியங்களைப் …

பரிந்துரைகள் Read More »

அழைப்பிதழ்

என் விருப்பத்திற்குரிய சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செகாவின் முக்கியச் சிறுகதைகள் குறித்து விரிவான உரை ஒன்றை நிகழ்த்த இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஆன்டன் செகாவ் குறித்து ஒரு உரை நிகழ்த்தினேன். LLA நூலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு செகாவ் வாழ்கிறார். மற்றும் செகாவின் மீது பனி பெய்து கொண்டிருக்கிறது என்ற இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதில் செகாவ் வாழ்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல்.  இரண்டும் தேசாந்திரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. …

அழைப்பிதழ் Read More »

நன்றி ஷாஜி

மலையாள இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் பற்றிய லிஜின் ஜோஸின் ஆவணப்படம் குறித்து நான் எழுதிய  கட்டுரையை நண்பர் ஷாஜி மலையாளத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அது இம்மாத மாத்யமம் இதழில் வெளியாகிறது. வாட்ஸ்அப் வழியாக அக்கட்டுரையை லிஜின் ஜோஸ் உள்ளிட்ட மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரையும் வாசிக்கச் செய்துள்ளார் ஷாஜி. இன்னொரு பெரிய சந்தோஷம் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளா சென்ற ஷாஜி இக்கட்டுரையை ஜே.ஜி. ஜார்ஜ் அவர்களிடம் வாசித்துக் காட்டியிருக்கிறார். அவரது பாராட்டு எனக்குக் கிடைத்த கௌரவமாகும். …

நன்றி ஷாஜி Read More »

குறும்பட வெளியீடு

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள மை டியர் செகாவ் குறும்படத்தின் வெளியீட்டு விழா 28.4.2019 ஞாயிறு மாலை ஆறுமணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நான் ஆன்டன் செகாவ் சிறுகதைகள் பற்றி  சிறப்புரை நிகழ்த்த உள்ளேன். கூடுதல் விபரங்களை இரண்டு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்

நன்றி

நேற்று எனது பிறந்த நாளுக்காக நேரிலும் அலைபேசியிலும் இணையத்திலும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. உங்கள் அன்பும் நட்புமே என் எழுத்திற்கான உறுதுணை.

மை டியர் செகாவ்

அண்ணா பல்கலைகழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்துள்ள எனது பையன் ஹரி பிரசாத் தனது இரண்டாவது குறும்படத்தை இயக்கியிருக்கிறான். இதன் கதையை நான் எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியாகவுள்ள இக்குறும்படம் குறித்த அறிவிப்பு.