காணொளி
புத்தக வெளியீட்டு விழாவில் எனது உரை காணொளி https://www.youtube.com/watch?v=kvrPhGk39ZQ&feature=em-uploademail
புத்தக வெளியீட்டு விழாவில் எனது உரை காணொளி https://www.youtube.com/watch?v=kvrPhGk39ZQ&feature=em-uploademail
புகைப்படங்கள் : கமல கண்ணன்
நேற்று எனது ஐந்து நூல்களின் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்து சிறப்பித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய நீதியரசர் மகாதேவன். வாழ்த்துரை வழங்கிய ஜெயசீலன் ஐஏஎஸ், குறிஞ்சிவேலன், எஸ்.ஏ.பி. அருணன், தங்கப்பன் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றிகள். தியேட்டர் லேப் குழுவின் சார்பில் எனது சதுரத்தில் வசிப்பவன் நாடகத்தை நிகழ்த்திய ஜெயராவ் அவர்களுக்கும் நன்றி. நடிகர்கள் இருவருக்கும் மிகுந்த பாராட்டுகள். நிகழ்வை முழுமையாக படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி டிவிக்கு நன்றி. FB நேரலை …
அமெரிக்கத் தமிழர்களால் வழங்கப்படும் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2017ம் ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது விருது பெறும் பா.வெங்கடேசன், ஆ.இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.வெங்கடேசன் மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். புனைவெழுத்தில் தனித்துவமிக்க மொழியை,கதையாடலை கைக்கொண்டு வருபவர் பா.வெங்கடேசன். வரலாற்று ஆய்வாளரும் …
நாளை நடைபெறவுள்ள தேசாந்திரி பதிப்பக நூல் வெளியீட்டு விழாவில் தியேட்டர் லேப் குழுவினர் எனது “சதுரத்தில் வசிப்பவன்“ நாடகத்தை நிகழ்த்துகிறார்கள்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளரான செல்மா லாகர்லாவ் எழுதிய தேவமலர் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. அதைப்பற்றி விரிவாக உரையாற்றியிருக்கிறேன். க.நா.சு மொழியாக்கம் செய்த அக்கதையை எனது விரிவான அறிமுகவுரையோடு தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. உலக இலக்கியத்தின் முக்கிய நூல்களை வெளியிட தேசாந்திரி முனைகிறது. அதன் துவக்கப் புள்ளியாக இதை வெளியிட இருக்கிறோம். சென்னைப் புத்தக கண்காட்சியில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும்