அறிவிப்பு

டெல்லி தமிழ் சங்கத்தில்

சாகித்ய அகாதமி விருது பெற்றதற்காக டெல்லி தமிழ் சங்கம் ஒரு பாராட்டு நிகழ்வை  ஜனவரி 31 மாலையில் ஏற்பாடு செய்திருந்தது.  நண்பர் பென்னேஸ்வரன் இதனைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.  தலைவர் இந்துபாலா, பொதுச்செயலாளர் திரு. முகுந்தன்,   ஷாஜகான் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள்  பலரும் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் சஞ்சாரம் குறித்த தனது  பார்வைகளை பேராசிரியர் ராஜகோபால் முன்வைத்து உரையாற்றினார்.  திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை வகித்தார். அரங்கு நிரம்பிய கூட்டம். இது போலவே தமிழ்நாடு இல்லத்திலும் பாராட்டு …

டெல்லி தமிழ் சங்கத்தில் Read More »

டெல்லி விழா

நாளை டெல்லி செல்கிறேன்.  29 மாலை சாகித்ய அகாதமி விருது விழா. சாகித்ய அகாதமி 31 காலை 10 மணிக்கு நேருக்கு நேர் நிகழ்ச்சியை ரவீந்திர பவனில் நடத்துகிறது.   ஆ. இரா. வேங்கடாசலபதியுடன் உரையாடுகிறேன் ஜனவரி 31  மாலை 7 மணிக்கு  டெல்லி தமிழ் சங்கத்தில் பாராட்டுவிழா. இரண்டிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பாராட்டு விழா

· நேற்று நடைபெற்ற இந்திய ரஷ்ய கலாச்சார நிகழ்வில் சாகித்ய அகாடமி விருது பெற்றதற்காக என்னைக் கௌரவித்தார்கள் ISRO தலைமை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை அவர்கள் பாராட்டு பட்டயம் வழங்கி கௌரவித்தார். நிகழ்விற்கு காரணமாக இருந்த ரஷ்ய கான்ஸ்லேட் ஜெனரல்  Oleg N. Avdeev அவர்களுக்கும், ரஷ்ய கலாச்சார மையத்தின் தங்கப்பன் அவர்களுக்கும்  நன்றி.

டெல்லி பயணம்

சாகித்ய அகாதமி விருது வழங்கும் விழா ஜனவரி 29 டெல்லி காமினி அரங்கில் நடைபெறவுள்ளது. விருது பெறுவதற்காக ஜனவரி 28 டெல்லி செல்கிறேன். ஒரு வார காலம் டெல்லியில் தங்கியிருப்பேன். இந்த நாட்களில் சாகித்ய அகாதமி நடத்தும்  Face to Face உள்ளிட்ட ஐந்து நிகழ்ச்சிகள் உள்ளன. விரிவான தகவல்களை இரண்டு நாளில் வெளியிடுகிறேன்

நன்றி

இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் துவக்க நாள் முதல் இறுதி நாள் வரை அத்தனை நாட்களும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுபவம். வித விதமான வாசகர்கள். புத்தகங்களின் கடலுக்குள்ளாக நாளெல்லாம் நீந்தியபடியே இருந்தது மிகுந்த மனவெழுச்சி தந்தது. ஊடகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு தந்த முக்கியத்துவம் மிகுந்த பாராட்டிற்குரியது. அன்றாடம் ஸ்ருதி டிவி மூலம் நேரலையில் புத்தகக் கண்காட்சி குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். நிறைய நூல்களைப் பரிந்துரை செய்தேன். ஐம்பதுக்கும் …

நன்றி Read More »

அக்காளின் எலும்புகள்

கவிஞர்  வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர்.  சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன்.  வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. குற்றத்தின் நறுமணம் (மு.2011) – புதுஎழுத்து பதிப்பகம். கொஞ்சம் மனது வையுங்கள் …

அக்காளின் எலும்புகள் Read More »