அறிவிப்பு

கபீர் கவிதைகள்

புன்னகைக்கும் பிரபஞ்சம்’ – கபீர் கவிதைகள் | மொழிபெயர்ப்பாளர் செ.செங்கதிர் வெளியீட்டு விழா. எஸ்.ராமகிருஷ்ணன் உரை | புன்னகைக்கும் பிரபஞ்சம் – கபீர் கவிதைகள் | S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=p3t3DHAdadc&fbclid=IwAR1Qs6vqroA3AZTpgAQO3IskgQvA3LyXxCC9AaNP5aPqAObot8Tz-DVF9So நன்றி ஸ்ருதி டிவி

எனது பரிந்துரை

புத்தகக் கண்காட்சியில்  வாங்குவதற்கான எனது பரிந்துரை தனது 96 வது வயதில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதியுள்ள புதிய நாவல். அவரது கையெழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது இந்த இவள் /கி.ராஜநாராயணன் ( புதிய நாவல்) காலச்சுவடு பதிப்பகம் விலை: ரூ.175 இம்பர் உலகம் /ஞானக்கூத்தன் கவிதைகள் ( மிகச்சிறந்த கவிதைகள்) நவீன விருட்சம் வெளியீடு அசோகமித்ரன் உரையாடல்கள் ( நேர்காணல்கள்) நவீன விருட்சம் சொற்கள் ( மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகள்) ழாக் பிரெவர் கவிதைகள் க்ரியா பதிப்பகம் மதுரம் …

எனது பரிந்துரை Read More »

கபீர் கவிதைகள்

செங்கதிர் அவர்களின் மொழியாக்கத்தில் கபீரின் கவிதைகள் வெளியாகின்றன. புன்னகைக்கும் பிரபஞ்சம் என்ற இந்நூலின் வெளியீட்டுவிழா ஜனவரி 11 மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது

புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்

இன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி.  இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது.  கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது.  சரியாகப் பேசமுடியாத சிரமம்.  என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து …

புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள் Read More »

வாழ்த்துகள்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள். சமூக அக்கறையுடன் நேரடியாக களத்திற்கே சென்று செய்திகளை ஆராய்ந்து மறைக்கபட்ட உண்மைகளை உரத்து சொல்லி வரும் குணசேகரன்  மிகுந்த பாராட்டிற்குரியவர். தேசிய அளவிலான விருது அவரது செயல்பாடுகளுக்கு கிடைத்த சரியான அங்கீகாரம். அவரது இதழியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது தினமும் மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 220 மற்றும் 221 ல் இருப்பேன் விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம். ••• விகடன் வெளியிட்ட துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரியில் புதிய பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அரிய புகைப்படங்கள்

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் சிவாஜி, ஜெமினியுடன் மிகுந்த நட்பாகப் பழகினார். காருகுறிச்சியாரின் சில அரிய புகைப்படங்கள்

அரவான் நாடகம்

டிசம்பர் 30 மாலை புதுவைப் பண்பாட்டு மையத்தில் அரவான் நாடகம் சிறப்பாக அரங்கேறியது.   நண்பர் சுகுமார் சண்முகம் இயக்கி நடித்திருந்தார். அரவான் நாடகத்தைக் காண அரங்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். பத்தாண்டுகள் முன்பாக கருணா பிரசாத் இந்த நாடகத்தை தீப்பந்த வெளிச்சத்தில் மாறுபட்ட நிகழ்வாக  உருவாக்கியிருந்தான். அதிலிருந்து மாறுபட்டு  சுகுமார்  மரபுக்கலைகளுடன் இணைத்து இந்த நாடகத்தை புதிய வடிவில் நிகழ்த்தியது   பாராட்டிற்குரியது. அரங்க அமைப்பு. ஒளி.  உடைகள், இசை பாடல்கள் பொம்மலாட்டம் என அத்தனையும் சிறப்பாக இருந்தன. …

அரவான் நாடகம் Read More »

புத்தாண்டு இரவு

2019 புத்தாண்டு துவங்குவதை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகத்தில் வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. நிறைய இளைஞர்கள். குழந்தைகளுடன் குடும்பமாக சிலர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இலக்கியம்,  சமகாலப் பிரச்சனைகள், கல்வி, பண்பாடு, வரலாறு, சினிமா, தத்துவம் என பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடினோம்.   இனியதாக புத்தாண்டு துவங்கியுள்ளது.  இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நீடிக்கட்டும். புத்தாண்டு துவங்கியதும் காலையில் Memories Look at Me:  Tomas Transtromer என்ற புத்தகம் படித்தேன். நோபல் பரிசு பெற்ற …

புத்தாண்டு இரவு Read More »