அறிவிப்பு

வாழ்த்துகள்

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அன்பிற்குரிய  வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். •• விளக்கு விருது 1996முதல்அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களை முறையாகக் கண்டறிந்து வழங்கப்படும் கௌரவிக்க விருது. இந்த ஆண்டுக்கான விளக்கு விருதிற்கு கவிஞர் சமயவேலும் எழுத்தாளர் ராஜ்கெளதமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது பெற்ற இருவருக்கும் என் மனம்கனிந்த வாழ்த்துக்கள். ••

துர்கனேவ் உரை

2018 புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் பற்றி நான் சிறப்புரை நிகழ்த்தினேன். அதன் காணொளி Writer S.Ra speech on Ivan turgunev https://youtu.be/S4X8Y4YzS-8 ** யூடியூப்பில் எனது உரைகளைக் காண்பதற்கான தேசாந்திரி சேனல் ஒன்றை துவக்கியிருக்கிறது. அதை Subscribe செய்து உதவுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 ••

இலக்கியப் பேருரைகள்- டிவிடி

லியோ டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பாஷோ, ஹோமர், ஹெமிங்வே, ஆயிரத்தோரு அராபிய இரவுகள், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட ஏழு இலக்கியப்பேருரைகளின் டிவிடி புத்தக கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது single dvd :  Rs.100 set    : Rs.600 தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண்கள் 391 & 392 •• தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com

அட்சரம் இதழ்கள்

அட்சரம் என்ற இலக்கிய இதழை நான் 2001ல் நடத்தினேன்.  நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட இதழ்களில் மீதமிருப்பவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு இதழின் விலை ரூ 10 கிடைக்கும் இடம் புத்தக கண்காட்சியில் : தேசாந்திரி பதிப்பகம்அரங்க எண் 391 & 392 *** தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:desanthiripathippagam@gmail.com

துணையெழுத்து உள்ளிட்ட நூல்கள்

விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள எனது நூல்களான துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, உணவு யுத்தம், சிறிது வெளிச்சம்,  இந்திய வானம் ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரி பதிப்பக அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும் அரங்கு எண்கள்  391 392

நன்றி

வெளியான ஒரு வார காலத்தில் கடவுளின் நாக்கு முதல் பதிப்பு விற்று தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு புத்தகக் கண்காட்சிக்காக தயாராகி  வருகிறது. தேசாந்திரி பதிப்பக நூல்களை வாங்கி ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் விலை ரூ 350 நூலைப் பெற தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail …

நன்றி Read More »

தேசாந்திரி அரங்கு எண்கள் 391& 392

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள  செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தகக்  காட்சியில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது எண்கள் 391& 392 முதன்மை நுழைவாயிலாக உள்ள ஐந்தாவது நுழைவாயில் வழியாக வந்தால்  கடைசி இரண்டுகடைகள். பபாசி அலுவலகம் உள்ள வாசல் வழியாக  வந்தால் அதே வரிசையின் கடைசி இரண்டு கடைகள். முதல் நுழைவாயில் வழியாக வந்தால் 6 வது பாதையில் கடைசி. கடைசி நுழைவாயில் வழியாக வந்தால் ஐந்தாவது பாதையில் …

தேசாந்திரி அரங்கு எண்கள் 391& 392 Read More »

தி இந்து விழா

இன்று காலை நடைபெற்ற தி இந்து  லிட் பார் லைப் இலக்கியவிழாவில் கலந்து கொண்டு தமிழ் சிறுகதை குறித்து உரையாற்றினேன். மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள். எழுத்தாளர் ந.முத்துசாமி நிகழ்வைத் துவக்கி வைத்தார். . எனக்கு முன்பாக எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பானதொரு துவக்கவுரையை வழங்கினார். தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் தி இந்து தமிழ் நாளிதழுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.