நினைவின் கரையில் நிற்கிறோம்
ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம் மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.
ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம் மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.
குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார். அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை …
எனது நூறு புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வு இணைய வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். காலை10,30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. எனது உரையைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். எஸ்.ரா நூறு நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடித்தி முடித்துள்ள முனைவர். சு.வினோத் மற்றும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய அமைப்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி. பேராசிரியர் வினோத்தின் அழைப்பை ஏற்று எஸ்.ரா நூறு நிகழ்வில் …
எம்.ஜி. பவேரியா இயக்கத்தில் ஜெயா பாதுரி நடித்துள்ள FTII டிப்ளமோ திரைப்படம் சுமன். 1970ம் ஆண்டு வெளியானது . கறுப்பு வெள்ளையில் அழகான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய கிராமமும் துள்ளியோடும் ஜெயா பாதுரியின் விளையாட்டுதனமும் வசீகரிக்கின்றன. கிராமத்திற்கு வரும் குரங்காட்டி, படம் காட்டுபவர். கோவிலில் சாமி முன்பாக உள்ள காசைத் திருடி ஐஸ் வாங்குவது. தோழி வீட்டிற்குச் சென்று சந்திப்பது, கிராமவீதிகளில் தன்னிஷ்டம் போல சுற்றியலைவது போன்ற காட்சிகள் கடந்த காலத்தின் நினைவைத் தூண்டுகின்றன. பதின்ம வயதில் …
மழை தரும் அனுபவத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சிறந்த இசையோடு கவித்துவமாக விவரித்துள்ளது இந்த ஆவணப்படம். 1967ல் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற ஆர்.கே. ராமச்சந்திரன் இயக்கிய டிப்ளமோ பிலிம். பல்வேறு வகையான வாழ்க்கைச் சூழல் கொண்டவர்கள் மழையை எதிர்கொள்ளும் விதம் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. . மழைத் தண்ணீரில் விளையாடியபடி செல்லும் பள்ளிச்சிறார்கள். மழைக்கு முன்பும் பின்புமான மனநிலை. தாகத்தில் தண்ணீர் குழாயினை உறிஞ்சும் நாய். பேனா விற்பவர், கடைச்சிப்பந்தி, அழகான பெண்ணுக்கு இடம் தரும் இளைஞன், …
உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார். இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி. இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் …
தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath. இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார். பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். 1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது. அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.
நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.