அறிவிப்பு

யாத்ரிக்

இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது. மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது. இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது. இணைப்பு : https://www.youtube.com/watch?v=1vPpUBuXNP0

வரலாற்றின் சாட்சியம்

சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன். காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது. இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் இதற்கு …

வரலாற்றின் சாட்சியம் Read More »

எஸ்.ரா 100 தொடர் நிகழ்வுகள்

எனது நூறு நூல்களுக்கான விமர்சனக்கூட்டங்கள் வாரந்தோறும் இணையத்தில் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் சார்பில் பேராசிரியர் வினோத் இதனை ஒருங்கிணைப்பு செய்கிறார் இன்றைய நிகழ்வில் ஐந்து நூல்கள் குறித்து உரையாற்றுகிறார்கள். விருப்பமான அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

விருது விழா

பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமானநிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கபட்டிருந்த மீரா இன் போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. புதிய மேம்பாலங்களைக் காண முடிந்தது. தொண்ணூறுகளில் பார்த்த டிராம்களைக் காணமுடியவில்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பழைய நினைவாக டிராம் …

விருது விழா Read More »

லாஸ்லோவின் நூலகம்

“தி ப்ரூடலிஸ்ட்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி லாஸ்லோ டோத் நூலகம் ஒன்றை வடிவமைப்பதாகும். அதுவும் வாசிப்பதற்கு ஏற்ற விளக்குடன் கூடிய நாற்காலி ஒன்றையும் வடிவமைக்கிறான். தொழிலதிபர் ஹாரிசன் லீ வான் ப்யூரனுக்காக அந்த நூலகத்தை வடிவமைக்கும்படி அவரது மகன் லாஸ்லோவை அழைக்கிறான். லாஸ்லோ டோத் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கட்டிடக்கலை நிபுணர். மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆகவே …

லாஸ்லோவின் நூலகம் Read More »

நாவல்வாசிகள் 4

இந்து தமிழ் திசை நாளிதழில் ஞாயிறு தோறும் வெளியாகிவரும் நாவல்வாசிகள் தொடரின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது

கொல்கத்தா தமிழ் சங்கவிழா

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் மே 3 சனிக்கிழமை மாலை ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் திரு. சி.முருகன் ஐஏஎஸ் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

கொல்கத்தா /விருது விழா

பாரதிய பாஷா பரிஷத் விருது வழங்கும் விழா கொல்கத்தாவில் மே 1 வியாழன் மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் முப்பது மதியம் கொல்கத்தா செல்கிறேன். மூன்று நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருப்பேன். கொல்கத்தாவில் வசிக்கும் வாசகர்கள் / நண்பர்கள் சந்திக்க விரும்பினால் 9600034659 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை சார்ந்து இரண்டு நாடகங்களை எழுதியிருக்கிறேன். இரண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறப்பான வரவேற்பும் கிடைத்தது. இத்தோடு அவரது Notes from Underground யை அடிப்படையாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறேன். அந்த நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வெளி ரங்கராஜன் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகங்களையும் தொகுத்து ஒரே நூலாகத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடவுள்ளது. அதன் தலைப்பு “ தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்“