ஜெயமோகன் பிறந்த நாள்
எனது அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் வகையிலான அவரது படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய செயல்பாட்டிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
எனது அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் வகையிலான அவரது படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய செயல்பாட்டிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
எனது இடக்கை நாவல் இந்தி மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
போப் பிரான்சிஸ் மறைவிற்கு எனது மனமார்ந்த அஞ்சலி. போப் பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை Hope என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். பொதுவாக இது போன்ற வாழ்க்கை வரலாற்றைப் போப்பாண்டவரின் மறைவிற்குப் பின்பாகவே எழுதுவார்கள். வெளியிடுவார்கள். ஆனால் போப் பிரான்சிஸ் தான் வாழும் காலத்திலே தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். இதனை எழுத ஆறு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இதில் அவரது குடும்ப வரலாறும் இளமைக்கால நினைவுகளும் எழுதப்பட்டிருக்கின்றன. போப் பிரான்சிஸ் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் …
எனது நூறு நூல்கள் குறித்து இணையத்தில் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழ் பேராசிரியர் முனைவர். சு.வினோத். அவருக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும். அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் மூலம் இந்த இணைய வழி நிகழ்வு நடைபெறுகிறது. நாளைக் காலை பத்துமணிக்கு அதன் முதல் நிகழ்வு துவங்குகிறது. அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். நிகழ்ச்சி விபரம் எஸ்.ரா நூல்கள் 100Vinod S is inviting you to a scheduled Zoom meeting. …
இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. வெ.நீலகண்டன் இந்த நேர்காணலை எடுத்துள்ளார் நன்றி ஆனந்தவிகடன் வெ.நீலகண்டன் புகைப்படம் : ராகேஷ்
எனது பிறந்த நாளுக்காக நெதர்லாந்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வான்கோ அருங்காட்சியகத்தில் கிடைக்கும் Van Gogh – The Potato Eaters 3D Print வாங்கி அனுப்பியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஓவியமது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். காலம் இதழில் வெளியாகியுள்ளது முப்பரிமாணத்தில் அந்த வீடும் மனிதர்களும் அசைவதைக் காணும் போது அந்த வீட்டிற்குள் நாமிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. . சரவணனுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள் பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக …
எனது புதிய பத்தியான நாவல்வாசிகளில் புகழ்பெற்ற வங்க நாவலான நீலகண்டப் பறவையைத் தேடி குறித்து எழுதியிருக்கிறேன்.
நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற எனது பிறந்த நாள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நிறைய நண்பர்கள், வாசகர்கள் வந்திருந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி