அறிவிப்பு

நேர்காணல்

இந்து தமிழ் திசை இதழில் நேற்று வெளியான எனது நேர்காணல் நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் மண்குதிரை.

நன்றி

பாரதிய பாஷா விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பும் ஆசியும் தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. இந்தத் தருணத்தில் எனது பெற்றோர்கள், மனைவி பிள்ளைகள், ஆசிரியர்கள். சகோதர சகோதரிகள், நண்பர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். உங்களின் குவிந்த கரங்கள் தான் எனது எழுத்தெனும் சுடரைப் பாதுகாக்கிறது. விருதுச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்டு என்னைக் கௌரவப்படுத்திய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், மற்றும் …

நன்றி Read More »

முதல்வரின் வாழ்த்துச் செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி •• தமிழக முதல்வரின் அன்பான வாழ்த்துக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

பாரதிய பாஷா விருது

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எனக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத் இந்திய அளவில் சிறந்த இலக்கிய வாதிகளைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கிறது. 2025ம் ஆண்டிற்கான விருதிற்கு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றேன்.  இது எனது வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ 1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. விருது வழங்கும் விழா 01.05.2025 …

பாரதிய பாஷா விருது Read More »

பிறந்த நாள் கொண்டாட்டம்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 13 ஞாயிறு காலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நண்பர்கள் ஒன்று கூடும் விழா நடைபெறுகிறது. இதில் எனது மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன பிரையில் வடிவில் தபால்பெட்டி எழுதிய கடிதம் நூல் வெளியாகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு ரஷ்ய காதல் கதைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறேன். வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறுகிறது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

நிமித்தம் / ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது நிமித்தம் நாவலை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். Unremembered நூல் ஏப்ரல் 13 ஞாயிறு காலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது.

தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் The Browless Dolls வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி. இந்தக் கதைகள் பல்வேறு இணைய இதழ்களிலும் ஆங்கில இலக்கிய இதழ்களிலும் வெளியானவை. இந்த நூலின் வெளியீட்டு விழா ஏப்ரல் 13 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது.

பிரெய்லி புத்தகம்

எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூலை வாசித்த மாணவர்கள் நிறைய பாராட்டுக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இந்த நூல் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று பார்வையற்றவர்களுக்காகப் பிரெய்லி வடிவில் வெளியாகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஆடிட்டர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி ••

சிறந்த கதை

Borderless இலக்கிய இதழ் கடந்த ஆண்டில் வெளியான படைப்புகளில் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்து பாராட்டியிருக்கிறார்கள் எனது The Browless Dolls சிறுகதை அதில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இதன் மொழிபெயர்ப்பாளர் டாக்டர் சந்திரமௌலிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இரு சகோதரர்கள்

அழிசி வலைப்பக்கத்தில் அ.கி. கோபாலன் மற்றும் அ.கி. ஜயராமன் நேர்காணலை ஸ்ரீநிவாச கோபாலன் வெளியிட்டுள்ளார். 1995ல் புதிய பார்வையில் வெளியான இந்த நேர்காணலை எடுத்தவர் குரு. புகைப்படங்களை எடுத்தவர் சுதாகர் ஸ்ரீநிவாச கோபாலன் இதனை மீள்பிரசுரம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள். ‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில …

இரு சகோதரர்கள் Read More »