அறிவிப்பு

தேவதச்சனுக்கு விருது

தமிழ்நவீன கவிதையின் தனிப்பெரும் ஆளுமையான கவிஞர் தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விளக்கு விருது வழங்கப்படுகிறது, அமெரிக்காவில் இருந்து இயங்கும் விளக்கு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விளக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது, இந்த விருதை நகுலன், விக்ரமாதித்யன், பூமணி. சி.மணி உள்ளிட்ட பல முக்கிய படைப்பாளிகள் பெற்றிருக்கிறார்கள், விருது வழங்கும் விழா ஜனவரியில் நடைபெற உள்ளது தேவதச்சன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1952இல் பிறந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கசடதபற, …

தேவதச்சனுக்கு விருது Read More »

காந்தி

மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர் என்ற தலைப்பில் காந்தி குறித்து நான் பேச இருக்கிறேன் டிசம்பர் 24 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் எனது புத்தக வெளியீட்டுவிழா நடைபெற உள்ளது, அதில் இந்தத் தனிஉரை நடைபெற இருக்கிறது. புத்தரைப் போலவே உலகெங்கும் அறியப்பட்ட மகத்தான ஆளுமை மகாத்மா காந்தி. இருவருமே அயராத பேச்சாளர்கள், சமூகப் போராளிகள், மக்களைத் தேடித் தேடி சந்தித்தவர்கள். காந்தி குறித்து நிறையப் பேசியும், எழுதியுமிருக்கிறார்கள், …

காந்தி Read More »

அழைப்பிதழ்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 24 மாலை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

புத்தக வெளியீடு

உயிர்மை பதிப்பகம் நடத்தும் எனது ஐந்து புதிய நூல்களின் வெளியீட்டு விழா  டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, இந்த விழாவின் ஒரு பகுதியாக ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் நடைபெற உள்ளது, இதைத் தியேட்டர் லேப் சார்பில் இயக்குபவர் ஜெயராவ். புத்தக வெளியீட்டில்  திரு. R.பாலகிருஷ்ணன் IAS, எஸ்.ஏ.பெருமாள், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர்.ராமகுருநாதன், கபிலன்வைரமுத்து, …

புத்தக வெளியீடு Read More »

தமிழ்வாசக தளம்

இணையதளத்தில் தமிழ்படைப்புகள் அதிகம் வாசிக்க கிடைப்பதில்லை என்ற குறையைப் போக்கிட புதியதொரு இணையதளம் உருவாகியிருக்கிறது ஒபன் ரீடிங் ரூம் என்ற இந்த இணையதளத்தில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் துப்பறியும் நாவல்களில் இருந்து லா.ச.ராவின் இதழ்கள் வரை நிறைய படைப்புகள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன இவற்றை இணையதளத்திற்கு சென்று நேரடியாக வாசிக்கலாம்,  அல்லது  தரவிறக்கம் செய்து கொள்ளலாம் தமிழ் இலக்கிய வாசிப்பினை மேம்படுத்துவதற்கு இது ஒரு அரிய சேவை இதனைச் சாத்தியமாக்கியுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ரமேஷ் சக்ரபாணிக்கும் அவரது தோழமை …

தமிழ்வாசக தளம் Read More »

கோவை இலக்கியச்சந்திப்பு

டிசம்பர் 17ம்தேதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கோவையில் ஒரு இலக்கியச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, சந்தித்துப் பேச விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் இந்த நிகழ்வினை தமிழின் முக்கிய ஆளுமையான ஞானி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்கிறார். இடம் : சிபி ஐஏஎஸ் அகாதமி வளாகம், காந்திபுரம், கோவை. கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க:   ராமச்சந்திரன் 918012638277. டிசம்பர் 18 மாலை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பூமணி அவர்களுக்கு விருதுவழங்கப்படும் நிகழ்வில் பேச இருக்கிறேன், …

கோவை இலக்கியச்சந்திப்பு Read More »

தென்றல்

வடஅமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் இதழில் எனது நேர்காணல் வெளியாகி உள்ளது அதற்கான இணைப்பு https://tamilonline.com/thendral/

புதிய தொடர்

ஜுனியர் விகடன் இதழில் எனது இந்தியா என்ற புதியதொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன், இது அடுத்த  இதழ் முதல் வெளியாகிறது அது குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது •• எனது இந்தியா வரலாறு என்ற பறவைக்கு கடந்த காலம்  நிகழ்காலம் என்ற இரண்டு சிறகுகள் இருக்கிறது, அது நிகழ்காலம் எனும் வானில் பறந்து கொண்டிருக்கிறது, பறத்தலின் ஊடே எத்தனையோ இறகுகள் உதிர்ந்தாலும் மறுபடியும் முளைத்துக் கொண்டேதானிருக்கிறது. எப்போதும் போல பறவையும் முன்னெடுத்து பறந்து கொண்டேதானிருக்கிறது. மன்னர்களின் வாழ்க்கை …

புதிய தொடர் Read More »

அரங்காடல்

கனடாவின் டொரோண்டோ நகரில் செயல்பட்டுவரும் மனவெளி கலையாற்றுக்குழு எனும் நாடக அமைப்பு  நவீன தமிழ்நாடகங்களை மிகச்சிறப்பாக நிகழ்த்தி வருகிறது. ஆண்டுதோறும் புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்வதற்கு அரங்காடல் என்ற நிகழ்வினையும் ஏற்பாடு செய்துவருகிறார்கள், இது குறித்து நண்பர் செல்வன் வழியே நிறைய அறிந்திருக்கிறேன். 2012 ஜனவரி எட்டாம் தேதி டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள அரங்காடல் நிகழ்வில் எனது கடவுளின் குரலில் பேசி என்ற சிறுகதையின் நாடகவடிவம் நிகழ்த்தப்பட இருக்கிறது, இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவர் செழியன். நெறியாள்கை …

அரங்காடல் Read More »

உரையின் பதிவு

நேற்று ஷேக்ஸ்பியர் பற்றிய எனது உரையைக் கேட்பதற்கு நிறையப் பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர், பல்வேறு கல்விப்புலம் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள்,  அரங்கு நிரம்பி இருக்கை கிடைக்காமல் பலரும் தரையில் அமர்ந்து உரையைக் கேட்டார்கள். டெல்லி. பெங்களுர். மும்பை, இலங்கை, மதுரை, கோவை என்று பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு இந்த உரைகளைக் கேட்பதற்காகவே வந்து அறை எடுத்து தங்கியிருப்பதாக சில நண்பர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டார்கள், இந்த ஆதரவு மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கிறது •• உலக இலக்கியம் …

உரையின் பதிவு Read More »