அறிவிப்பு

காந்தியின் கடிதம்

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, 1931 ஆகஸ்ட் 28 தேதியிட்டு இந்திய அரசின் உள்துறைச் செயலர் ஹெர்பர்ட் வில்லியம் எமர்சனுக்குக் காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது அவரது இடது கையால் எழுதப்பட்ட கடிதமாகும். இரண்டு கைகளாலும் காந்தியால் எழுத முடியும். இந்தக் கடிதம் இடது கையால் எழுதப்பட்டது என்ற தகவலை காந்தியே தெரிவிக்கிறார். இடது கையால் எழுதப்பட்ட போதும் எழுத்துக்கள் சரிவாகவோ, துண்டிக்கப்பட்டோ காணப்படவில்லை. வரிகளுக்கு இடையே சரியான இடைவெளியும் …

காந்தியின் கடிதம் Read More »

எனது உரை

பெரம்பலூர் 9 வது புத்தகத் திருவிழாவில் பிப்ரவரி 1 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு உரையாற்றுகிறேன் தலைப்பு : காலம் சொல்லும் பதில்

மாயநகரின் வாசல்

மங்கை செல்வம் ஏழுதலை நகரம் பற்றிய விமர்சனம். கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் மீன்கள் நீந்துவதும் அதே கதவுகளில் உள்ள எழுத்துகள் இடம் மாறுவதும் நடக்குமா என்ன? யாருமே உள்ளே செல்ல முடியாத கண்ணாடிக்காரத் தெருவில் இவை எல்லாம் நடக்கும். உலகிலேயே வயதான பருத்த ஆமை எப்படி இருக்கும்? எலிகளுக்கு பள்ளிக்கூடம் உண்டா? அங்கே என்ன பாடம் கற்பிக்கப்படும்? கடவுள்களில் பெரிய கடவுள் என்றும் சிறிய கடவுள் என்றும் உண்டா? மதரா என்ற மாய நகரமும், அதன் மேலே ஓடும் …

மாயநகரின் வாசல் Read More »

புத்தகத் திருவிழா – நன்றி

சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி, இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது. வெளியூர்களில் இருந்தும் …

புத்தகத் திருவிழா – நன்றி Read More »

மிலன் குந்தேரா நாவல்

செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் வாழ்வின் தாள முடியா மென்மை நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனைப் புகழேந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை புத்தகத் திருவிழாவில் உள்ள காலச்சுவடு பதிப்பக அரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

உதவி தேவை

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும் எனது மின்னஞ்சல் முகவரி writerramki@gmail.com

தேவதச்சன் கவிதைகள்

தேவதச்சனின் முழுக்கவிதை தொகுப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இதில் 2016 வரையிலான அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 8ம் தேதி இந்த நூல் வெளியாகிறது. இதனை சென்னை புத்தகத் திருவிழால் உள்ள தேசாந்திரி பதிப்பக அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகிறது. கவிதை என்பது எதிரெதிர் உண்மைகளின் தழுவல் என்கிறார் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் அதனைத் தேவதச்சனின் கவிதைகளை வாசிக்கும் போது நன்றாக உணர முடிகிறது. தண்ணீரைப் போல நிசப்தமாக, ரகசியமாக, தனக்கான பாதையைத் …

தேவதச்சன் கவிதைகள் Read More »

எனது பரிந்துரை -2

அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். சென்னைப் புத்தகத் திருவிழாவில் நேற்று நிறைய கூட்டம். பலரும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. புத்தகத் திருவிழாவில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் கடையில் வங்கச் சிறுகதைகள். ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி போன்ற சிறந்த நூல்கள் கிடைக்கின்றன. பறவையியலாளர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல் இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலின் சிறப்புப் பதிப்பை நூல் வனம் வெளியிட்டுள்ளது. …

எனது பரிந்துரை -2 Read More »