கிறுகிறுவானம்
எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி
எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி
புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன. இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன். எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். காஃப்காவின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக நான் எழுதிய கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. (28.7.24) தமிழ் இந்து நாளிதழுக்கும் மண்குதிரைக்கும் மனம் நிறைந்த நன்றி.
கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம். விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன். கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. …
மகாத்மா காந்தியின் குண்டு துளைத்த உடலை The Last Journey Of Gandhi என்ற ஆவணப்படத்தில் காணும் போது மனம் கலங்கிவிட்டது. ரத்தக்கறை படிந்த காந்தியின் உடை மற்றும் அவரது உடலுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிகளை இதில் காணலாம் அவரது கடைசி நாளின் சாட்சியாக உருவாக்கபட்ட இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது. பத்து நிமிஷங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் யூடியூப்பில் காணக்கிடைக்கிறது The Last Journey Of Gandhi
தேசாந்திரி பதிப்பகம் கோவை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 9. ஜுலை 26 (26.07.2024) வெள்ளி முதல் 28 ஞாயிறு வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் வாசகர்கள், நண்பர்கள் தேசாந்திரி பதிப்பக அரங்கில் சந்திக்கலாம். புதிய வெளியீடுகள் :
எனது விரும்பிக் கேட்டவள் சிறுகதை பி.பி.ஸ்ரீநிவாஸின் ரசிகையைப் பற்றியது. இந்தக் கதையை படித்துவிட்டு பி.பி.ஸ்ரீநிவாஸ் எனக்கு விருந்து கொடுத்துப் பாராட்டினார். விகடனில் வெளியான இக்கதையினை நூறு பிரதிகள் ஜெராக்ஸ் எடுத்து பலருக்கும் அனுப்பி வைத்தார். பின்பு அதனை சிறுவெளியீடாக அவரே வெளியிட்டார் அதன்பிறகு அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். திரையுலக அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு இசைமேதை. பத்து மொழிகள் அறிந்தவர். விரும்பிக் கேட்டவள் சிறுகதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நேற்று …
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
நாளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெறும் கனவுமெய்ப்பட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நண்பர் ஆம்பூர் அசோகன் சமீபத்தில் பிராக் நகருக்குச் சென்றிருந்தார். காஃப்கா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். காஃப்கா அருங்காட்சியம் மற்றும் நகரிலுள்ள காஃப்காவின் சுழலும் தலை, புத்தகக் கடைகள், நூலகம் குறித்து வியந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார் அங்கிருந்து எனக்காக சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். இன்று அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும். புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற அசோகன் தேர்ந்த இலக்கிய வாசகர். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து …