அறிவிப்பு

மலேசியப் பயணம்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன். பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.

Indian Literature இதழில்

எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு செப்டம்பர் மாத Indian Literature இதழில் வெளியாகியுள்ளது. இக்கதையை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

மதுரை வருகை

செப்டம்பர் 13 மற்றும் 14 நாட்களில் மதுரை வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முக்கியப்பணி ஒன்றின் காரணமாக சென்னையில் இருக்க வேண்டியதால் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புத்தகத் திருவிழாவில் பேசுகிறேன்.

பேனா மருத்துவமனை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர். …

பேனா மருத்துவமனை Read More »

போர்ஹெஸின் சித்திரக்கதை

போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது. போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி …

போர்ஹெஸின் சித்திரக்கதை Read More »

மதுரைப் புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

அரவான் நாடகம்

எனது அரவான் நாடகத்தை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் தீபக் குமார். இளம் நாடக நடிகரான இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். டிசம்பரில் மும்பையில் நடைபெறவுள்ள நாடகவிழாவில் இதனை நிகழ்த்த இருக்கிறார். அரவான் நாடகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதனை ஒரியண்ட் லாங்மேன் வெளியிட்டிருக்கிறார்கள்.

திருடன் படித்த புத்தகம்

சில நாட்களுக்கு முன்பு ரோமில் ஆள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வெளியேறும் போது புத்தகம் ஒன்றைக் காணுகிறான். இத்தாலிய எழுத்தாளர் Giovanni Nucci எழுதிய The Gods at Six O’Clock என்ற புத்தகத்தை வாசிக்கத் துவங்கி தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருக்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிடுகிறார். தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் தனது குற்றச்செயலை மறந்து திருடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்த நிகழ்வை இணைய …

திருடன் படித்த புத்தகம் Read More »

உடலும் உணர்வும்

சீன எழுத்தாளரான ஷாங் சியான் லியாங்கின் இரண்டு கதைகளை உடலும் உணர்வும் என்ற பெயரில் கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். சவுத் ஆசியன் புக்ஸ் 1992ல் வெளியிட்டுள்ளது. இதில் கைப்பு ஊற்று என்றொரு சிறுகதையிருக்கிறது. அக்கதை லாரி ஒட்டுநரால் சொல்லப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் பாலைவனத்தினைக் கடந்து செல்லும் பயணத்தின் போது லாரியில் பயணிக்கிறார். அப்போது லாரியின் ஒட்டுநர் தனது கடந்தகாலக் கதையைச் சொல்லத் துவங்குகிறார். நீண்ட தூரப் பயணங்களின் போது லாரி ஒட்டுநர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்குவதைப் பற்றியும் அவர்கள் …

உடலும் உணர்வும் Read More »

உதிர்ந்த பற்கள்.

மைக்கேல் ஜோஷெங்கோ (Mikhail Zoshchenko) ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். அரசியல் நையாண்டிக் கதைகள் எழுதியவர். இதன் காரணமாக ரஷ்ய எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர். 1895ல் உக்ரேனில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ஓவியர். அம்மா நாடக நடிகை. ஏழு வயதிலே ஜோஷெங்கோ கவிதைகள் எழுத துவங்கினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். முதல் உலகப்போரின் காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போரின் போது விஷவாயு தாக்கியதால் இவரது உடல் …

உதிர்ந்த பற்கள். Read More »